வீடு / சமையல் குறிப்பு / கதம்ப சாதம்

Photo of Kadamba Sadham by Krishnasamy Vidya Valli at BetterButter
1331
3
0.0(0)
0

கதம்ப சாதம்

Dec-02-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கதம்ப சாதம் செய்முறை பற்றி

காய்கள் மற்றும் தானியங்கள் சேர்த்து செய்ப்படும் நோ கார்லிக் நோ ஆனியன் வகையை சேர்ந்த சாத வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 2 கப்
  2. துவரம்பருப்பு - 1 / 2 கப்
  3. காய்கள் - பொடியாக நறுக்கியது ( வெங்காயம் பூண்டு தவிர ) - 1 கப்
  4. தானியங்கள் -3 / 4 கப்(கொண்டகடலை மொச்சை காராமணி வேர்கடலை )
  5. புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
  6. உப்பு - 1 1/4தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  8. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி
  9. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 3 ஆர்க்கு பெருங்காயம் - 2 சிட்டிகை மிளகாய் வத்தல் - 1 தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி கத்தரிக்காய் பொடியாக நறுக்கியது - 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  10. வறுத்து அரைக்க :
  11. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  12. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  13. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  14. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  15. எள்ளு - 1 / 2 தேக்கரண்டி
  16. மிளகாய் வத்தல் - 4
  17. மிளகு-1/2தேக்கரண்டி
  18. கொப்பரை துண்டுகள் -3 அல்லது 4
  19. எண்ணெய் - 2துளிகள்

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. தானியங்கள் அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக விடவும். கூடவே அரிசி தனியாகவும் பருப்பு தனியாகவும் குக்கரில் வேக வைக்கவும்
  3. வறுத்து அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்து வறுத்து கரகரப்பாக மிக்ஸியில் திரிக்கவும்
  4. காய்களை உப்பு மஞ்சள்பொடி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  5. பாதி வெந்ததும் புளியை கரைத்து சேர்க்கவும்
  6. உப்பு சேர்க்கவும். பின்னர் வேகவைத்த தானியங்கள் சேர்க்கவும்
  7. நன்றாக கலக்கவும் பின்னர் வறுத்து திரித்தது சேர்க்கவும்
  8. பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்
  9. சாதம் சேர்த்து கிளறவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வத்தல் தாளித்து தேங்காய் துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வறுத்து இறுதியில் சேர்க்கவும்
  11. கொத்தமல்லி இலை தூவினால் அருமையான கதம்ப சாதம் தயார் வெள்ளரி சாலட்உடன்பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்