வீடு / சமையல் குறிப்பு / சக்கரைவள்ளிக்கிழங்கு அடை

Photo of Sweet Potato Adai by Menaga Sathia at BetterButter
1356
3
0.0(0)
0

சக்கரைவள்ளிக்கிழங்கு அடை

Dec-02-2017
Menaga Sathia
140 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சக்கரைவள்ளிக்கிழங்கு அடை செய்முறை பற்றி

புளிப்பு,இனிப்பு,காரம் என அனைத்தும் கலந்த சுவையான அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய சக்கரைவள்ளிகிழங்கு - 1/2 கப்
  2. புழுங்கலரிசி -1 கப்
  3. காய்ந்த மிளகாய் -5
  4. புளி- 1 நெல்லிக்காயளவு
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
  6. பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
  7. பெருங்சீரகம் -1டீஸ்பூன்
  8. துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  9. தாளிக்க
  10. கடுகு-1/2 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  12. உப்பு - தேவைக்கு
  13. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. புழுங்கலரிசியை கழுவி 2 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.
  2. பின் நீரை வடித்து மிக்ஸியில் காய்ந்த மிளகாய் உப்பு,புளி ,துருவிய சக்கரைவள்ளிகிழங்கு,பெருங்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. மாவின் பதம் மிக கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்ககூடாது.
  4. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. இதனை மாவில் கலக்கவும்.துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றி சிறுதீயில் வேகவைக்கவும்.
  7. ஓரங்கள் சிவந்ததும் திருப்பி போட்டு மீண்டும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
  8. இதனை வெண்ணெய் வைத்தோ அல்லது சட்னியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்