வீடு / சமையல் குறிப்பு / நெய் அப்பம்

Photo of Nei appam by neela karthik at BetterButter
820
3
0.0(0)
0

நெய் அப்பம்

Dec-02-2017
neela karthik
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெய் அப்பம் செய்முறை பற்றி

கார்த்திகை தீப ஸ்பெஷலான அப்பம் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி: 1 கப்
  2. வெல்லம்: 1/2 கப்
  3. ஏலக்காய்: 5
  4. நெய்: 1/4 கப்
  5. வாழைப்பழம்: 1 (சிறியது)
  6. தேங்காய் துருவல்: 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  3. ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
  4. பிறகு அதில் வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
  5. தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
  6. அதனுடன் பழம் சேர்த்து அரைக்கவும்.
  7. நன்கு மைய அரைக்கவும்.
  8. 1 மணிநேரம் கழித்து அடுப்பில் பனியார கல் வைத்து நெய் தடவி காய விடவும்.
  9. அதில் சிறிய சிறிய பனியாரமாக ஊற்றவும்.
  10. நன்றாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான அப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்