வீடு / சமையல் குறிப்பு / வஞ்சர மீன் பிரியானி

Photo of King Fish Biryani by Jasmin Sheik at BetterButter
548
3
0.0(0)
0

வஞ்சர மீன் பிரியானி

Dec-02-2017
Jasmin Sheik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வஞ்சர மீன் பிரியானி செய்முறை பற்றி

அருமையான அசைவ உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சரமீன் 1 கிலோ
  2. பிரியாணி அரிசி 2கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. பச்சைமிளகாய் 4
  6. கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது
  7. நெய் 2 மேசைக்கரண்டி
  8. மல்லி , புதினா இலைகள் 1 கை அளவு
  9. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் 3 மேசைக்கரண்டி
  11. பெருஞ்சீரக தூள் 3 மேசைக்கரண்டி
  12. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  13. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  14. தயிர் 2 தேக்கரண்டி
  15. உலர் திராட்சை & முந்திரி பருப்பு சிறிது
  16. உப்பு
  17. தண்ணீர் 2 கப்
  18. பால் 1 கப்
  19. ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மீனை மசாலாக்கள் ( மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி மஞ்சள் 1/2 தேக்கரண்டி, பெருஞ்சீரக தூள் 1 மேசைக்கரண்டி உப்பு, இஞ்சி பூண்டு விழுது) தடவி அரை மணிநேரம் ஊற வைக்கவும். அதேசமயம் அரிசியும் ஊற வைக்கவும்....
  2. பாத்திரத்தில் நெய் விட்டு கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி சிறிது, பச்சைமிளகாய் 1 சேர்த்து வதக்கவும், மல்லி இலை, பதினா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்..
  4. நன்கு வதங்கியதும் 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர்,உப்பு,ரோஸ் வாட்டர் சேர்த்து கொதித்ததும் அரிசி சேர்த்து வேக விடவும்.
  5. சிறிது வெங்காயத்தை நைசாக வெட்டி நெய்யில் பொரித்து எடுக்கவும்,
  6. மீனை பொரித்து எடுக்கவும்
  7. பிரியாணி கிரேவிக்கு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி பச்சைமிளகாய் ,மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்
  8. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பின் மசாலா சேர்த்து கொதித்ததும் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். 2 துண்டு பொரித்த மீனை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.
  9. பின் கிரேவி மற்றும் மீன் துண்டுகளை வெந்த அரிசி சாதத்தின் மேல் பரத்தி மல்லி இலை புதினா மற்றும் பொரித்த வெங்காயம், உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து 5 நிமிடம் தம்மில் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்