வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரைட் ரைஸ் முட்டை கபாப்

Photo of Fried rice Egg kebab by Rabia Hamnah at BetterButter
28
2
0.0(0)
0

ஃப்ரைட் ரைஸ் முட்டை கபாப்

Dec-03-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரைட் ரைஸ் முட்டை கபாப் செய்முறை பற்றி

மீதமான ஃப்ரைட் ரைஸ் அல்லது வெரும் சாதம் வைத்து உடனடியாக இப்படி செய்து குழந்தைகளை அசத்தலாம்.முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு சந்தோஷம் நமக்கும் திருப்தி கிடைக்கும். முட்டையில் கால்ஷியம் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பது அவசியம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஃப்ரைட ரைஸ்-1 கப்
  2. முட்டை-2 (வேக வைத்தது)
  3. வெங்காயம்-3 (பொடியாக நறுக்கியது)
  4. வேக வைத்த உருளைக் கிழங்கு -2 பெரியது
  5. நறுக்கிய பச்சை மிளகாய்-1
  6. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-2ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  9. சீரகத்தூள்-3ஸ்பூன்
  10. சோம்பு தூள்-1/2 ஸ்பூன்
  11. கரமசாலா-1ஸ்பூன்
  12. நறுக்கிய மல்லி இலை, கறிவேப்பிலை- கொஞ்சம்
  13. எலுமிச்சை சாறு-1ஸபூன்.
  14. உப்பு-தேவைக்கு
  15. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன் வதக்க+ பொறிக்க தேவையான அளவு
  16. பிரட்டி வைக்க தேவையானவை:
  17. முட்டை-1(அடித்தது
  18. பிரட் தூள்-1/2கப

வழிமுறைகள்

  1. முதலில் பாத்திரத்தில் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  2. பின்பு கரமசாலா தவிர்த்து மற்ற எல்லா தூள் வகைகளை சேர்க்கவும். குறைந்த தணலில் வைத்து பின்பு மசித்த உருளைக் கிழங்கு, ஃப்ரைட் ரைஸ், உப்பு, கரமசாலா சேர்த்து பிரட்டி எலுமிச்சை சாறு, மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். ஆற விடவும்.
  3. வேக வைத்த முட்டையை நீளமாக நான்காக வெட்டி வைக்கவும்.
  4. உருளைக் கலவையை கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி வெட்டிய முட்டையில் ஒன்றை வைத்து உருளைக் கலவையை மூடவும்.
  5. பின்பு அடித்து வைத்த முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி வைத்து காய்ந்த எண்ணெயில் பொறித்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்