பஞ்சாபி தம் ஆலு | Punjabi Dum Aloo in Tamil

எழுதியவர் Pavithira Vijay  |  20th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Punjabi Dum Aloo by Pavithira Vijay at BetterButter
பஞ்சாபி தம் ஆலுPavithira Vijay
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

6655

0

பஞ்சாபி தம் ஆலு

பஞ்சாபி தம் ஆலு தேவையான பொருட்கள் ( Ingredients to make Punjabi Dum Aloo in Tamil )

 • 30 பேபி உருளைக்கிழங்கு
 • 2 வெங்காயம் (அரைத்துச் சாந்தாக்கப்பட்டது)
 • 2 தக்காளி (சாந்து)
 • 10 முந்திரி பருப்பு (ஊறவைத்து சாந்தாக அரைக்கப்பட்டது)
 • 2-3 தேக்கரண்டி எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 1/2 தேக்கரண்டி கொத்துமல்லித் தூள்
 • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
 • தேவையான அளவு உப்பு
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்

பஞ்சாபி தம் ஆலு செய்வது எப்படி | How to make Punjabi Dum Aloo in Tamil

 1. பேபி உருளைக்கிழங்கை சற்றே உப்பு சேர்த்து 1 விசிலுக்கு பிரஷர் குக்கரில் வேகவைத்து தோல் உரித்து தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. முந்திரி பருப்புகளை சூடானத் தண்ணீர் 15-20 நிமிடங்கள் ஊறவைத்து மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 3. சிறிது எண்ணெயை ஒரு வறுவல் பாத்திரத்தில் சூடுபடுத்தி உருளைக்கிழங்கைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
 4. இப்போது மீதமுள்ள எண்ணெயை ஒரு பாத்திரத்தில் மீண்டும் சூடுபடுத்தி, சீரகம் பெருங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயச் சாந்து சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்க. அதன்பின்னர் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மிதமானச் சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.
 5. வெங்காயச் சாந்து நன்றாகப் பொன்னிறமானதும், தக்காளிச் சாந்தைச் சேர்த்து 5-6 நிமிடங்கள் வதக்கவும். அதன்பின்னர் மசாலா பவுடர்களைச் சேர்த்து (கரம் மசாலாவைத் தவிர) கலந்துகொள்க.
 6. குழம்பு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு முந்திரிபருப்பு சாந்தைச் சேர்த்து மேலும் 4ல் இருந்து 5 நிமிடங்கள் வேகட்டும்.
 7. தண்ணீர் சேர்த்து குழம்பு கொதிக்கும்போது வறுத்த பேபி உருளைக்கிழங்குகளைப் போடவும். தீயை சிறு தீயாக-மிதமானத் தீயாகக் குறைத்து உருளைக்கிழங்குகள் சிம்மில் குழம்பில் 7ல் இருந்து 8 நிமிடங்கள் இருக்கட்டும்.
 8. அதன்பின்னர் கரம் மசாலாவையும் நசுக்கிய கஸ்தூரி வெந்தயத்தையும் சேர்த்து அடுப்பை 2-3 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தவும்.

எனது டிப்:

வழக்கமான உருளைக்கிழங்கை பாதியாக அல்லது கால் பங்காகப் பயன்படுத்தலாம். பொதுவாக உருளைக்கிழங்கு எண்ணெயில் பொரிக்கப்பட்டு குழம்பில் சேர்க்கப்படும். ஆனால் நான் அவற்றை வேகவைத்துப் பொரித்தேன்.

Reviews for Punjabi Dum Aloo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.