சக்சுக்கா | Shakshuka in Tamil

எழுதியவர் Ritu Sharma  |  21st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Shakshuka by Ritu Sharma at BetterButter
சக்சுக்காRitu Sharma
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

843

0

சக்சுக்கா recipe

சக்சுக்கா தேவையான பொருட்கள் ( Ingredients to make Shakshuka in Tamil )

  • 3 முட்டைகள்
  • 1 சின்ன வெங்காயம், நறுக்கியது
  • 1/2 மஞ்சள் மணி மிளகு
  • 1/2 சிவப்பு மணி மிளகு
  • 4 பூண்டு பற்கள், நறுக்கியது
  • 2 தேக்கரண்டி தக்காளி சாந்து
  • 1 தேக்கரண்டி பாப்ரிக்கா (சிவப்பு மிளகு)
  • 1/2 தேக்கரண்டி அரைத்த மிளகு
  • அலங்கரிக்கக் கொத்துமல்லி
  • சுவைக்கேற்ற உப்பு

சக்சுக்கா செய்வது எப்படி | How to make Shakshuka in Tamil

  1. ஒரு பெரிய வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து அவை மென்மையாக பளபளப்பாக மாறும்வரை வதக்கவும்.
  2. மணி மிளகுகளையும் பூண்டையும் சேர்த்து மென்மையாகும்வரை வேகவைக்கவும்.
  3. தக்காளி சாந்து, சிவப்பு மிளகு, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. கலவையில் முட்டைகளை உடைத்து, மூடி 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. மிளகு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுவையூட்டி மேலும் 3-5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. அடுப்பிலிருந்து இறக்கி, கொத்துமல்லியால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Shakshuka in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.