Photo of Chakkoli by Jasmin Sheik at BetterButter
1234
7
0.0(0)
0

சக்கோலி

Dec-03-2017
Jasmin Sheik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சக்கோலி செய்முறை பற்றி

பண்டிகைக் கால உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு 2 கப்
  2. தேங்காய் 1 கப்
  3. சிக்கன் 1 கிலோ
  4. கிராம்பு, பட்டை ஏலக்காய் சிறிது
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. பச்சைமிளகாய் 4
  8. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் 2 மேசைக்கரண்டி
  10. பெருஞ்சீரக தூள் 2 மேசைக்கரண்டி
  11. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  12. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  13. தண்ணீர் 6 கப்
  14. எண்ணெய் 2 தேக்கரண்டி
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸியில் தேங்காய் ,கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருஞ்சீரக தூள் சேர்த்து பர பர என்று அரைத்து எடுக்கவும்
  2. 3 கப் தண்ணரில் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கொதித்ததும் 2 கப் அரிசி மாவை நன்றாக கலந்து கொள்ளவும் (கட்டியான கரண்டி யின் பின் முனையால் கிண்டவும்) மாவு இறுகி கட்டியாகும் . பின் சிறிது ஆற விடவும்
  3. கோழியை கட்டியான கிரேவி செய்ய வேண்டும் (குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்க்கவும் பின் கோழியை சேர்த்து 3 விசில் வந்ததும் மசாலாக்களையும் போட்டு கொதிக்க விடவும்)
  4. ஒரு வட்ட சட்டியில் 3 கப் தண்ணீரை மிதமான தீயில் கொதிக்க விடவும். அதேசமயம் தயாரான அரிசி மாவில் முக்கால் பாகத்தை தனியாக பிரித்து சிறு சிறு உருளைகளாக செய்து நடுவில் தட்டி (5 ரூ காசின் அளவு) கொஞ்சம் கொஞ்சமாக கொதித்து கொண்டிருக்கும் நீரில் தட்டவும் .
  5. இறுதியாக மாற்றி வைத்த கால் பாக மாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்கவும். கொதித்து இறுகி வரும்போது தாளித்து ( வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம்) போடவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்