எள் சாதம் | Ellu sadham in Tamil

எழுதியவர் neela karthik  |  4th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ellu sadham by neela karthik at BetterButter
எள் சாதம்neela karthik
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

3

0

எள் சாதம் recipe

எள் சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ellu sadham in Tamil )

 • அரைக்க
 • எள்: 2ஸ்பூன்
 • கடலை பருப்பு: 1 ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு: 1 ஸ்பூன்
 • வேர்க்கடலை: 1/2 ஸ்பூன்
 • வர மிளகாய்: 2
 • சாதம்: 1 கப்(வடித்து ஆற வைத்தது)
 • நல்லெண்ணெய்: 2 ஸ்பூன்
 • கடுகு: 1/2 ஸ்பூன்
 • மிளகாய் 1
 • உப்பு தேவைக்கேற்ப

எள் சாதம் செய்வது எப்படி | How to make Ellu sadham in Tamil

 1. க.பருப்பு,உ.பருப்பு எள்,மிளகாய் இவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும்.
 2. எள், மிளகாய் கருக விடாமல் மிதமான தீயில் வறுக்கவும்.
 3. தீயை குறைத்து வைக்கவும்.
 4. இவற்றை ஆற வைத்து பொடியாக அரைக்கவும்.
 5. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய விடவும்
 6. காய்ந்ததும் கடுகு, மிளகாய் தாளிக்கவும்.
 7. பிறகு அதில் சாதம் அரைத்த பொடி சேர்க்கவும்.
 8. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறி விடவும்
 9. 2 நிமிடம் கழித்து இறக்கினால் வாசனையான எள் சாதம் தயார்.

எனது டிப்:

நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தவும்.

Reviews for Ellu sadham in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.