வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி ரைஸ் பூரி

Photo of Spicy Rice Poori by Sowmya Sundar at BetterButter
416
3
0.0(0)
0

ஸ்பைசி ரைஸ் பூரி

Dec-04-2017
Sowmya Sundar
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி ரைஸ் பூரி செய்முறை பற்றி

கோவா,கொன்கன் பகுதியில் பிரபலமான உணவு இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கோவா
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு- 1 கப்
  2. மைதா மாவு- 1/4 கப்
  3. சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
  4. மல்லி தூள்- 1/2 டீஸ்பூன்
  5. வெந்தய பொடி- ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள்- 1/4 டீஸ்பூன்
  7. எள் - 1 டீஸ்பூன்
  8. எண்ணெய் பொரிக்க
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
  11. தண்ணீர் - 1 கப்

வழிமுறைகள்

  1. அரிசி மாவு, மைதா மாவு ,எள் மற்றும் அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. தண்ணீரை சூடாக்கி மாவில் விட்டு கரண்டியால் கலக்கி மூடி வைத்து விடவும்.
  3. 20 நிமிடம் கழித்து மாவில் சூடு குறைந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  4. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் . பின் ஒரு எண்ணெய் தடவிய கவரில் உருண்டையை வைத்து சிறிய பூரிகளாக தட்டி கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்
  6. தொட்டு கொள்ள எதுவும் தேவை இல்லை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்