BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தவா மீன் வறுவல்

Photo of Tawa fish fry by Asiya Omar at BetterButter
1
5
0(0)
0

தவா மீன் வறுவல்

Dec-04-2017
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தவா மீன் வறுவல் செய்முறை பற்றி

மீனில் மசாலா முழுவதும் கலந்து ஒரு மணி நேரம் ஊற விட்டு அப்படியே அனைத்து மீனையும் ஒரேடியாக போட்டு நிதானமாக பொரித்து எடுப்பது.

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • తక్కువ నూనెలో వేయించటం
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன் துண்டுகள் - 1 கிலோ
  2. எலுமிச்சை ஜூஸ் 1 மேஜைக்கரண்டி
  3. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  5. மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
  6. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  7. சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  9. கார்ன் மாவு - 3 தேக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கு
  11. எண்ணெய பொரிக்க - 5 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை சுத்தம் செய்து வாடை போகுமளவு நன்கு அலசி நீர் வடித்து வைக்கவும். எண்ணெய் தவிர அனைத்து தேவையான பொருட்களும் சேர்த்து மீனில் கலந்து குறைந்தது 1 மணி நேரம் ஊற விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
  2. ஒரு அகலமான தவா அல்லது பெரிய இரும்பு தோசைக்கலத்தில் எண்ணெய் சூடு படுத்தவும்.
  3. அதில் மீன் முழுவதும் பரவலாக போட்டு முதலில் தீயை கூட்டி வைத்து தவாவின் கைப்பிடியை பிடித்து அசைத்து கொடுக்கவும். மீன் துண்டுகள் ஒரே இடத்தில் ஒட்டாமல் அசைந்து கொடுக்கும். பின்பு தீயை நிதானமாக வைத்து இருபுறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான மீன் வறுவல் தயார்.பக்க உணவாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்