அரிசி & பாதாம் பால் ஐஸ்கிரீம் | Rice and Almond milk Icecream in Tamil

எழுதியவர் Saroja Kumararaja  |  5th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Rice and Almond milk Icecream recipe in Tamil,அரிசி & பாதாம் பால் ஐஸ்கிரீம், Saroja Kumararaja
அரிசி & பாதாம் பால் ஐஸ்கிரீம்Saroja Kumararaja
 • ஆயத்த நேரம்

  12

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

2

0

அரிசி & பாதாம் பால் ஐஸ்கிரீம் recipe

அரிசி & பாதாம் பால் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Rice and Almond milk Icecream in Tamil )

 • பாசுமதி அரிசி _1/2 கப்
 • பாதாம் _ 1 கப்
 • கன்டென்ஸ்டு/மில்க்மெய்ட் _ 1 டின்(400கி
 • சோளமாவு(கார்ன்ஃபளவர்) _ 2 மேஜைக்கரண்டி
 • விப்பிங் கிரீம் _ 1/2 கப்
 • தண்ணீர் _ 2கப் + 1/2 +1/2 கப்
 • ருசிக்கேற்ப**** குங்குமப்பூ ,பாதாம்/வெனிலா எசன்ஸ்

அரிசி & பாதாம் பால் ஐஸ்கிரீம் செய்வது எப்படி | How to make Rice and Almond milk Icecream in Tamil

 1. பாதாமை கொதிக்கும் நீரில் ஊற விட்டு தோலை நீக்கிக் கொள்ளவும்.
 2. பெரிய மிக்சி ஜாடியில் அரிசியை போட்டு நன்கு தூளாக்கி,அதோடு தோல் நீக்கிய முழு பாதாம், 2 கப் தண்ணீர் விட்டு 10_12 மணி நேரம் ஊற விடவும்
 3. ஊறிய கலவையை மிக்சியில் மைய அரைத்து, மஸ்லின் துணி வடி கொண்டு,பாலை பிழிந்து கொள்ளவும் இதே போல் மேலும் இரு முறை 1/2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பாலை பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும்.
 4. (எஞ்சிய சக்கையை பாசுந்தி அல்லது வேறு எதற்காவது பயன்படுத்திக் கொள்ளலாம்)
 5. எடுத்த பாலில் 1/4கப் பாலை தனியே எடுத்து அதில் சோளமாவை கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்
 6. மிகுதியான பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிகக் குறைந்த தீயில் சூடாக்கவும்.(கொதி வரக் கூடாது)
 7. சூடான பாலில் கொஞ்சம் தனியே எடுத்து குங்குமப்பூவை கரைத்துக் கொள்ளவும்.
 8. சூடாகிக் கொண்டிருக்கும் பாலில் சோளமாவு கரைசலை கலந்து 3_4 நிமிடத்திற்கு கை விடாமல் கிளறி பிறகு ,அடுப்பில் இருந்து இறக்கி, குங்குமப்பூ மற்றும் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கி ஆற விடவும்
 9. விப்பிங் கிரீமை அடித்து ஆறிய கலவையில் சேர்த்து (விரும்பினால் நறுக்கிய உலர் பழங்கள்/கொட்டைகள்,எசன்ஸ் சேர்க்கலாம்) பாத்திரத்தில் ஊற்றி 12 மணி நேரம் உறைய வைக்கவும்
 10. வேண்டிய போது சாக்லேட்/கேரமல்/பட்டர்ஸ்காட்ச் சாஸ் மற்றும் கேரமல் உலர் பழக்கொட்டை அலங்காரத்துடன் பரிமாறலாம்.

Reviews for Rice and Almond milk Icecream in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.