வீடு / சமையல் குறிப்பு / சக்கரை பொங்கல்

Photo of Sweet pongal by fathoom hameed at BetterButter
474
4
0.0(0)
0

சக்கரை பொங்கல்

Dec-05-2017
fathoom hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சக்கரை பொங்கல் செய்முறை பற்றி

சர்க்கரை, பச்சரிசி கொண்டு செய்யப்படும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 1 கப்
  2. பாசிபருப்பு 1/4 கப்
  3. பால் 4 கப்
  4. சர்க்கரை 2 கப்
  5. முந்திரி பருப்பு 3 மேஜைக்கரண்டி
  6. உளர்திராட்ச்சை 3 மேஜைக்கரண்டி
  7. ஏளக்காய் 5
  8. நெய் 1/4 கப்
  9. தேங்காய்ப்பூ 1/2கப்

வழிமுறைகள்

  1. ஒரு தேக்கரண்டி நெய்யில் பாசிப்பருப்பை மணம் வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
  2. வறுத்த பாசிப்பருப்புடன், பச்சரிசி சேர்த்து 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. ஒரு குக்கரில் ஊற வைத்த பாசிப்பருப்பு, பச்சரிசியில் இருந்து தண்ணீரை நன்றாக வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து கொதி வந்ததும் குக்கர் மூடி போட்டு 20 நிமிடம் குறைந்த தணலில் 3 விசில் வைக்கவும்.
  4. பின் இந்தக்கலவையை அகப்பையால் நன்கு மசித்து விடவும்.
  5. சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி வேகவைத்த அரிசி, பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.
  6. ஒரு வாணலியில் நெய் சேர்த்து அதில் முந்திரி, உலர்திராட்சை, ஏளக்காய் சேர்த்து நன்கு பொரிந்ததும் மேலே சொன்ன கலவையை ஊற்றி தேங்காய்ப்பூ சேர்த்து 5 நிமிடம் கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்