சாத டோக்ளா | Cooked Rice Dhokla in Tamil

எழுதியவர் Sowmya Sundar  |  5th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Cooked Rice Dhokla by Sowmya Sundar at BetterButter
சாத டோக்ளாSowmya Sundar
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1

0

சாத டோக்ளா recipe

சாத டோக்ளா தேவையான பொருட்கள் ( Ingredients to make Cooked Rice Dhokla in Tamil )

  • சாதம்- 1 கப்
  • ரவை- 1/2 கப்
  • தயிர்- 1/2 கப்
  • உப்பு- 1 டீஸ்பூன்
  • இஞ்சி துருவல்- 1 டீஸ்பூன்
  • ஈனோ சால்ட்- 1/2 டீஸ்பூன்
  • சீரக பொடி - 1/4 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்- 1
  • மிளகாய் தூள்- 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை சிறிது
  • கொத்தமல்லி- சிறிது

சாத டோக்ளா செய்வது எப்படி | How to make Cooked Rice Dhokla in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் சாதம், ரவை,தயிர், உப்பு ,ஈனோ சால்ட், இஞ்சி,மிளகாய் தூள் சீரக தூள், பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  2. இதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி இட்லி பானையில் 7 முதல் 10 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. ஆறியதும் கத்தியால் சதுரங்களாக துண்டு போடவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து டோக்ளாவின் மேல் ஊற்றி பரிமாறவும்.

எனது டிப்:

விரும்பினால் மாவுடன் துருவிய காரட் சேர்த்து கொள்ளலாம்

Reviews for Cooked Rice Dhokla in tamil (0)