பாலக் பன்னீர் | Palak Paneer ! in Tamil

எழுதியவர் Pavithira Vijay  |  21st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Palak Paneer ! by Pavithira Vijay at BetterButter
பாலக் பன்னீர்Pavithira Vijay
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

7138

0

பாலக் பன்னீர் recipe

பாலக் பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Palak Paneer ! in Tamil )

 • 2 தேக்கரண்டி புதிய கிரீம் (விருப்பம் சார்ந்தது)
 • 1 தேக்கரண்டி நசுக்கிய கஸ்தூரி வெந்தயம் (உலர் வெந்தயம்)
 • 3/4 தேக்கரண்டி சர்க்கரை
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
 • 1 தேக்கரண்டி கொத்துமல்லித்தூள்
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • தேவையான அளவு உப்பு
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • 2-3 கிராம்பு
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1-2 தேக்கரண்டி எண்ணெய்
 • 2 பச்சை மிளகாய்
 • 2 தக்காளி (சாந்து)
 • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
 • 350 கிராம் பன்னீர் (காட்டேஜ் வெண்ணெய்)
 • 2 கொத்து பசலிக்கீரை

பாலக் பன்னீர் செய்வது எப்படி | How to make Palak Paneer ! in Tamil

 1. பசலிக்கீரை இலைரகளை தண்டில் இருந்து பிரித்து நன்றாகக் கழுகிக்கொள்க. சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து இந்த பசலிக்கீரையை அதில் 2-3 நிமிடங்கள் வதக்கவும். சற்றே சுருங்க ஆரம்பிக்கும்போது அடுப்பை நிறுத்தவும். வடிக்கட்டி, தண்ணீரை பின்னர் பயன்படுத்துவதற்கு எடுத்துவைக்கவும்.
 2. பசலிக்கீரையை ஆறவிட்டு பச்சை மிளகாய் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்க.
 3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, சீரகம், பெருங்காயம், கிராம்பு சேர்த்து அதன்பின்னர் வெங்காயம் GG சாந்தையும் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
 4. வெங்காயம் மென்மையாகி நன்றாக வதங்கியதும், மசாலாத் தூளையும் (கரம் மசாலாவைத் தவிர) உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்க. உலர்ந்து கருகுகிறது என்றால் சிறிது தண்ணீரைத் தெளித்துக்கொள்ளவும்.
 5. மசாலா நன்றாக வெந்ததும், தக்காளி சாந்தைச் சேர்த்து பச்சை வாடை போகம்வரை, எண்ணெய் பிரியும் வரைத் தக்காளியை நன்றாக வேகவைத்துக்கொள்க. அதன்பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
 6. பசலிக்கீரை சாந்து, சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. ஒன்றல்லது இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு கொஞ்சம் கரம் மசாலாவைச் சேர்த்து ஒரு கலக்கு கலக்கிக்கொள்க.
 7. இதற்கிடையில், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைச் செய்யும்போது, பன்னீரை வெந்நீரில் 5-10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பன்னீர் துண்டுகளை பசலிக்கீரை குழம்பில் போட்டு தண்ணீர் பதத்தைச் சரிசெய்துகொள்ளவும் (பசலிக்கீரை கழுவியத் தண்ணீரைப் பயன்படுத்தவும்)
 8. சிறு தீயில் 2-3 நிமிடங்கள் வேகவைத்து, கொஞ்சம் கஸ்தூரி வெந்தயத்தை நசுக்கி குழம்பில் போடவும். கிரீம் சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பை நிறுத்தி முடித்துக்கொள்ளவும்.

Reviews for Palak Paneer ! in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.