வீடு / சமையல் குறிப்பு / சின்ன பிள்ளைகளின் சிக்கன் பிரியாணி

Photo of Chicken  rice by Begam KL Begam KL at BetterButter
374
4
0.0(0)
0

சின்ன பிள்ளைகளின் சிக்கன் பிரியாணி

Dec-06-2017
Begam KL Begam KL
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சின்ன பிள்ளைகளின் சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பிரியாணி காரமாக இருக்குனு சாப்பிடவில்லையா, இனி கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த மாதிரி காரமில்லாத பிரியாணி செய்து கொடுங்க திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. சிக்கன் 1/2. கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. நெய்
  5. கிஸ்மிஸ்
  6. முந்திரி
  7. ஆயில்
  8. வெங்காயம் 2
  9. பச்சை மிளகாய் 1
  10. புதினா மல்லி
  11. கருவேப்பிலை 2 கொத்து
  12. தக்காளி 2
  13. தேங்காய் பால் ஒருகப்
  14. உப்பு
  15. தக்

வழிமுறைகள்

  1. பிரியாணி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் பாத்திரம் வைத்து, அதில் மூன்று கரண்டி நெய் ஊற்றி, 2 கரண்டி ஆயில் ஊற்றி நன்கு சூடாக்கவும் ஆனியன், ஒரு பட்டை, கருவேப்பிலை, புதினா, மல்லி போடவும்
  3. நன்கு சிவந்தவுடன் , இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசம் போக வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. பின்பு சுத்தம் செய்த சிக்கனை போட்டு நன்கு கிளறவும். சிக்கன் 10 நிமிடம் மூடி வேக விடவும்
  5. பின்பு ஒரு கப்பிற்க்கு ஒன்னறை தண்ணீர் வீதம் தேங்காய் பால் சேர்க்கவும். மீதம் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு மூடவும்.
  6. சுற்றி நுரை வந்தவுடன், ஊற வைத்த அரிசியை போட்டு, கொஞ்சம் புதினா, மல்லி சேர்த்து கிளறி மூடவும்.
  7. நன்கு கொதி வரவும். உடனே சிம்மில் வைத்து வேக விடவும். 10 நிமிடம் கழித்து திரும்ப ஒரு கிளறு கிளறி மூடவும்.
  8. பிரியாணி பதம் முக்கால்வாசி வந்தவுடன், அடுப்பை சிம்மில் வச்சு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதன் மேல் தூக்கி வைக்கவும்.
  9. கிஸ்மிஸ், முந்திரி தேவையென்ளால் நெய்யில் வறுத்து அலங்கரிக்கவும். சூடான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கன் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்