வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரைட் ரைஸ்

Photo of Fried rice by fathoom hameed at BetterButter
354
4
0.0(0)
0

ஃப்ரைட் ரைஸ்

Dec-06-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரைட் ரைஸ் செய்முறை பற்றி

சுவையான, எளிமையான உணவு முறை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரியானி அரிசி 1/2 கிலோ
  2. தண்ணீர் 750 மில்லிடர்
  3. உப்பு (தேவையான அளவு)
  4. மிளகு தூள் (தேவையான அளவு)
  5. பீன்ஸ் 50 கிராம்
  6. கோஸ் 50 கிராம்
  7. குடைமிளகாய் 50 கிராம்
  8. கேரட் 50 கிராம்
  9. பச்சை பட்டானி 25 கிராம்
  10. ஸ்வீட் கார்ன் 25 கிராம்
  11. வெங்காய இலை (சிறிதளவு)
  12. ரம்பை இலை 1
  13. முட்டை 2
  14. எண்ணெய் 4 + 1 மேஜைக்கரண்டி
  15. கோழி 200 கிராம்
  16. இஞ்சி பூண்டு 1 மேஜைக்கரண்டி
  17. தயிர் 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, முட்டையில் கொஞ்சம் உப்பு, மிளகு தூள் போட்டு ஊற்றி கிளரி எடுத்துக் கொள்ளவும்.
  2. கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, மிளகு தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வரட்டிக்கொள்ளவும்.
  3. அரிசியுடன் தண்ணீர்,உப்பு, ரம்பை இலை சேர்த்து சாதம் செய்துக்கொள்ளவும்.
  4. மற்றொரு வாணலியில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், கோஸ், பீன்ஸ், பட்டானி, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கிய காய்கறிகளுடன் முட்டை, கோழி சேர்த்து சாதத்துடன் பிரட்டி வெங்காய இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்