வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton Biryani by Rabia Hamnah at BetterButter
540
3
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Dec-06-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் சுவையான பிரியாணி .

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. மட்டன்- 1 1/2கி
  2. பாஸ்மதி அரிசி-1 கி
  3. நெய்-150
  4. எண்ணெய்-150
  5. இஞ்சி பூண்டு விழுது- 3 கரண்டி (குழி கரண்டி)
  6. கிராம்பு-5 ஏலம்-7 கருவா-2 துண்டு
  7. வெங்காயம் -1/2கி
  8. தக்காளி -400கி
  9. ப.மிளகாய்-8
  10. தயிர்-400
  11. மிளகாய் தூள்-3 டேபிள் ஸ்பூன் + (காரத்திற்கேற்ப)
  12. மல்லி இலை-1/2 கட்டு புதினா -1/2 கட்டு
  13. எலுமிச்சை பழம்-1
  14. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை சுத்தம் செய்து, கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 1டேபிள் ஸ்புன் மிளகாய் தூள், பாதி தயிர் சேர்த்து 30 நிமிடம்முதல் 1மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. பின்பு குக்கரில் 2 விசில் வரும்வரை வேக வைத்து வைக்கவும். 2 விசில் போதுமானது.
  3. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஏலம் , கருவா, கிராம்பு இம்மூன்றையும் கொஞ்சம் இடித்து சேர்க்கவும்.
  4. பின்பு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் தக்காளி மிளகாய் சேர்க்கவும். பாதி அளவு மல்லி, புதினா சேர்க்கவும்.
  5. பின்பு தயிர் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்த கறியை சேர்க்கவும். பின்பு மிளகாய் பொடி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
  6. அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கோழியை நன்கு வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை கலைந்து வடிகட்டி சேர்க்கவும்.
  7. அரிசி 3/4 பதம் வெந்ததும் மிகக் குறைந்த தணலில் வைத்து மீதியுள்ள மல்லி, புதினா சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு மேலே வெயிட் ஏற்றி வைக்கவும். 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும் . சூடாக பரிமாறவும்.
  8. தம் போடும் முறை: தோசை கல்லை சூடேற்ற அடுப்பை குறைந்த தணலில் வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை ஏற்றி தம் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்