சிக்கன் பிரியாணி | Chicken biryani in Tamil

எழுதியவர் Margaret Charles  |  6th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chicken biryani by Margaret Charles at BetterButter
சிக்கன் பிரியாணிMargaret Charles
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  80

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

5

0

சிக்கன் பிரியாணி recipe

சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken biryani in Tamil )

 • சிக்கன் 3/4 கி
 • சீராக சம்பா அரிசி 1/2 கி
 • வெங்காயம் (பெரிது) 2
 • பச்சை மிளகாய் 4
 • தக்காளி 2
 • இஞ்சி பூண்டு விழுது 2 மே க
 • மஞ்சள் தூள் 1 tsp
 • வத்தல் தூள் 2 tsp
 • தயிர் 2 tbsp
 • எலுமிச்சை சாறு 1 tsp
 • புதினா
 • கொத்தமல்லி தழை
 • பட்டை 1 "
 • ஏலக்காய் 4
 • கிராம்பு 4
 • அன்னாசி பூ 1
 • ஜாதி பத்திரி சிறிதளவு
 • மராட்டா மொக்கு 1
 • பே லீப் 1
 • நல்லெண்ணெய் 3 மே க

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | How to make Chicken biryani in Tamil

 1. ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக சூடாக்கவும்
 2. பின்னர் அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு ஜாதி பத்திரி மராட்டா மொக்கு பே லீப் எல்லாவற்றையும் சேர்த்து எண்ணையில் வாடை சேரும் வரை வதக்கவும்
 3. பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் இவை இரண்டையும் சேர்க்கவும். வெங்காயம் நன்றாக பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
 4. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மனம் மாறும் வரை வதக்கவும்
 5. தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்
 6. எடுத்த புதினா கொத்தமல்லியை பாதி அளவு சேர்த்து வதக்கவும்
 7. பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து 15 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும்.
 8. இதில் மஞ்சள் தூள் வத்தல் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் 20 நிமிடம் வதக்கவும்.
 9. ஊற்றிய எண்ணெய் மேலே பிரிந்து வந்ததும், தயிர் சேர்த்து கலக்கவும்
 10. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் (தயிர் போக மீதமுள்ள அளவு)
 11. இதில் கழுவிய அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
 12. பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி அரிசி பாதி அளவு வேகும் வரை மிதமான தீயில் வைக்க வேண்டும்
 13. அதே சமயம் ஒரு தோசை கல்லை சூடேற்றவும்
 14. அரிசி பாதி வெந்தவுடன், பாத்திரத்தை தோசை கல்லில் வைக்கவும். தீயை குறைவாக வைக்க வேண்டும். இப்பொழுது மீதமுள்ள புதினா கொத்தமல்லி சேர்க்கவும்
 15. பத்திரத்தை நன்றாக மூடி அதின் மேல் கனமான கல் அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைக்கவும்.
 16. சரியாக 8-10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். பாத்திரத்தை தோசை கல்லின் மீதே அரை மணி நேரம் வைக்கவும்.
 17. பின்னர் அடியிலிருந்து மேலே கிளறி கொடுக்கவும்.
 18. சுவையான பிரியாணி தயார்

எனது டிப்:

எண்ணெய் கொஞ்சம் நன்றாக ஊற்றி தான் செய்ய வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும். குறைந்த தீயில் சமைக்கவும்

Reviews for Chicken biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.