வீடு / சமையல் குறிப்பு / பார்லி அரசி காய்கறி புலாவ்

Photo of Barley Rice Pulao by Jayanthy Asokan at BetterButter
1243
2
0.0(0)
0

பார்லி அரசி காய்கறி புலாவ்

Dec-06-2017
Jayanthy Asokan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பார்லி அரசி காய்கறி புலாவ் செய்முறை பற்றி

பார்லி மற்றும் காய்கறி அனைத்தும் ஒன்றாக கலந்த வித்யாசமான ருசியான புலாவ். பார்லி அரிசி கொண்டு செய்ப்பட்ட புது முயற்சி திருப்தியே.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பார்லி அரிசி 1கப்
  2. பீன்ஸ் 4
  3. குடமிளகாய் 1
  4. கேரட் 1
  5. முட்டைகோஸ் 1/4cup
  6. இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்
  7. வெங்காயம் 1/2
  8. சாம்பார் பொடி 1/2teaspoon
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. வேக வைக்க தண்ணி 2கப்
  11. கொத்தமல்லி சிறிது அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கப் பார்லி அரிசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
  2. ஊறிய பின் நன்கு கழுவ வேண்டும்.
  3. பார்லி யை தண்ணீரை விட்டு வேக வைக்கவேண்டும். நன்கு ஊறியதால் மிக சீக்கிரமாக வெந்துவிடும்.
  4. அளவான தண்ணீர் கொண்டு வேக வைப்பதால பார்லி அரிசி ் நன்கு வெந்து மலர்ந்து விடும்
  5. காய்கறிகளை நீளவாக்கில் அறிந்து கொள்ளவேண்டும்.
  6. ஒரு வாணலியில் சிறிது நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவேண்டும்.
  7. அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
  8. பின் வெங்காயம், கேரட் பீன்ஸ் போடா வேண்டும்.
  9. பின் குடமிளகாய் சேர்த்து சாம்பார் பொடி போட்டு வதக்க வேண்டும்.
  10. பின் இதில் பார்லி யை கலக்க வேண்டும்.
  11. மிக குறைவான தணலில் 5நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
  12. கொத்துமல்லி மேலே தூவி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்