வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஸ்டிக்ஸ்

Photo of Bread Sticks by fathoom hameed at BetterButter
559
3
0.0(0)
0

பிரட் ஸ்டிக்ஸ்

Dec-07-2017
fathoom hameed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஸ்டிக்ஸ் செய்முறை பற்றி

பார்டிகளுக்கான சிறந்த ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பிரட் துண்டுகள் 12
  2. முள் நீக்கிய கோழி 1 கப்
  3. மிளகு தூள் 3/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  5. உப்பு (தேவையான அளவு)
  6. தண்ணீர் 1 கப் + 1 மேஜைக்கரண்டி
  7. வெங்காயம் 3 (மெல்லியதாக நீள வாக்கில் நறுக்கியது)
  8. பச்சை மிளகாய் 3 (நறுக்கியது)
  9. இஞ்சி 1 1/2 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி
  11. மல்லி இலை 1/2 கப்
  12. கருவேப்பிலை (சிறிதளவு)
  13. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி + பொறிக்க தேவையான அளவு
  14. மைதா 2 மேஜைக்கரண்டி
  15. முட்டை 2
  16. பிரட் க்ரம்ப்ஸ் (பிரட் தூள்)3 கப்

வழிமுறைகள்

  1. கோழியுடன், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், 1 கப் தண்ணீர் சேர்த்து வரட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. இதனுடன் மிளகாய் துாள், வரட்டிய கோழி,மல்லி இலை, கருவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கி அடுப்பை அனைத்து ஆறவிடவும்.
  4. 2 மேஜைக்கரண்டி மைதாவுடன் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து மைதா பசை செய்துக்கொள்ளவும்.
  5. பிரட் துண்டுகளின் ஓரத்தை நீக்கி மெல்லிதாக உருட்டிக்கொள்ளவும்.
  6. உருட்டிய பிரட் துண்டுகளில் கோழியை வைத்து சுருட்டி ஓரங்களை மைதா பசை கொண்டு மூடவும்
  7. முட்டையில் சிறிதளவு உப்பு போட்டு அடித்துக்கொள்ளவும்.
  8. உருட்டிய பிரட்களை முட்டையில் முக்கி பின் பிரட் தூளில் பிரட்டி பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்