வீடு / சமையல் குறிப்பு / Bajra cake with jamun fruit cream frosting

Photo of Bajra cake with jamun fruit cream frosting by saranya sathish at BetterButter
1245
3
0.0(3)
0

Bajra cake with jamun fruit cream frosting

Dec-07-2017
saranya sathish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Bajra cake with jamun fruit cream frosting செய்முறை பற்றி

கம்பு மாவு, வெல்லம், நாவல் பழம் வைத்து செய்த சத்தான வித்தியாசமான கேக். இயற்கையான முறையில் கலர் செய்த கேக்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு - 3/4 கப்
  2. பேக்கிங் சோடா -3/4 தேக்கரண்டி
  3. கோதுமை மாவு - 3/4 கப்
  4. வெல்லம் - 3/4 கப்
  5. சோள மாவு - 2 டீஸ்பூன்
  6. கோக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு- சிறிது
  8. தயிர் - 3/4 கப்
  9. பால் -3/4 கப்
  10. எண்ணெய் -1/4 கப்
  11. வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி
  12. விப்பிங் கிரீம் - 1 கப்
  13. ஆரஞ்சு சாறு - 1 கப்
  14. சாக்லேட் பார் - 200 கிராம்
  15. விப்பிங் கிரீம் - 200 கிராம்
  16. துருவிய ஆரஞ்சு தோல் - 1/4 ஸ்பூன்
  17. நாவல் பழம் - 1 கப்
  18. செரி பழம் - சிறிது

வழிமுறைகள்

  1. கம்பு மாவு + கோதுமை மாவு+ சோள மாவு+கோக்கோ பவுடர்+ உப்பு+ பேக்கிங் சோடாவை 6 முறை நன்கு சலிக்கவும்.
  2. வெல்லத்தை பாலில் நன்கு கரைக்கவும். பின் வடிகட்டி அதில் பால் தயிர் எண்ணெய் எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. பின் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
  4. பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி ராகி மாவை பயன்படுத்தி டச்ட் செய்யவும்.
  5. பின் கேக் மாவை இந்த பாத்திரத்தில் ஊற்றி இரண்டு முறை தட்டவும்.
  6. ஓவனை 180°ல் 10 நிமிடம் சூடு செய்யவும். பின் பேக்கிங் பாத்திரத்தை உள்ளே வைத்து 30-35 நிமிடம் பேக் செய்யவும்.
  7. கேக் நன்கு ஆறியதும் பாதியாக கட் செய்யவும். ஆரஞ்சு சாறு தடவி விடவும்.
  8. ஒரு கடாயில் கட் செய்த நாவல் பழம், சிறிது வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  9. கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும். 10 நிமிடம் வேகவைத்து பின் ஆரவிடவும். மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  10. பாத்திரத்தில் கிரீம் நாவல் பழம் விழுது சேர்த்து சாப்ட் பீக் வரும்வரை பீட்டர் கொண்டு பீட் செய்யுவும்.
  11. ஆரஞ்சு சாறு தடவிய ஒரு பாதி கேக்கில் கிரீம் தடவி அடுத்த பாதியை வைத்து மூடவும்.
  12. பின் கேக்கை சுற்றி நன்கு கிரீமை தடவவும். பிரிட்சில் அரை மணிநேரம் வைக்கவும்.
  13. பின் திரும்பி இதேபோல் ஒருமுறை கிரீமை தடவவும்.
  14. பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அதன் மேல் ஒரு பாத்திரத்தில் துருவிய சாக்லேட் விப்பிங் கிரீம் சேர்த்து நன்கு மெல்ட் செய்யவும்.
  15. சாக்லேட் முழுவதும் கரைந்ததும். துருவிய ஆரஞ்ச் தோல், ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து 2 மணிநேரம் பிரிட்சில் வைக்கவும்.
  16. பின் இந்த சாக்லேட் ஆரஞ்சு கிரீமை வைத்து பூ, ச்டார் டிசைன் பண்ணவும்.
  17. மேலே செரி பழம் கொண்டு அலங்கரித்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Dec-14-2017
Adaikkammai Annamalai   Dec-14-2017

Really great sis.... Doing great job ... Keep rocking..

Meera Ansari
Dec-07-2017
Meera Ansari   Dec-07-2017

சிறப்பு....

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்