வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சோமாஸ்

Photo of Sweet Somas by saranya sathish at BetterButter
725
3
0.0(0)
0

இனிப்பு சோமாஸ்

Dec-07-2017
saranya sathish
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சோமாஸ் செய்முறை பற்றி

எள் தேங்காய் திராட்சை முந்திரி பேரிச்சை பழம் சேர்த்து செய்த சத்தான இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - தேவைக்கு
  2. தேங்காய் - 1/2 மூடி துருவியது
  3. நெய் - 3 டீஸ்பூன்
  4. வெல்லம் - 3/4 கப்
  5. முந்திரி, பாதாம், திராட்சை, பேரிச்சை பழம் - சிறிது (பொடியாக கட் செய்யவும்)
  6. ரவை - 50 கிராம்
  7. உப்பு - தேவைக்கு
  8. மைதா மாவு - 1/4 கிலோ
  9. பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
  10. வறுத்த கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
  11. வறுத்த வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்
  12. வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
  13. கான் ப்ளார் மாவு - 1/4 கப்
  14. தண்ணீர் - சிறிது

வழிமுறைகள்

  1. பட்டரை உருக்கி, மாவு, ரவை உப்பு கலவையில் சேர்த்துக் குழைத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாம், திராட்சை, பேரிச்சை பழம் போட்டு வறுத்து வெள்ளை எள், கருப்பு எள், தேங்காய்த் துருவல் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
  3. கடைசியாக வெல்லம் சேர்த்து வதக்கி இறக்கவும்.  கலவை சிறிது கெட்டியாகும் வரை ஆற வைக்கவும். கார்ன் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  4. மாவை பூரி மாவு உருண்டை அளவுக்கு உருட்டி லேசாக மாவு தடவி  திரட்டி கொள்ளவும்.
  5. பின் ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே எள் & தேங்காய்  கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி தணலை மிதமாக வைத்து சோமாஸை  பொரித்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்