வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்பி த்ரெட் சிக்கன்

Photo of Crispy thread chicken by Rabia Hamnah at BetterButter
204
3
0.0(0)
0

க்ரிஸ்பி த்ரெட் சிக்கன்

Dec-07-2017
Rabia Hamnah
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்பி த்ரெட் சிக்கன் செய்முறை பற்றி

கட்லெட்டிற்கு பதிலாக இப்படி வித்தியாசமாக செய்து விருந்தினரை அசத்துங்கள்.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • கிட்டி பார்ட்டிஸ்
 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. உருளை கிழங்கு-4 (வேக வைத்து மசித்தது)
 2. ப.பட்டானி-1கப் ( வேக வைத்தது)
 3. பெரிய வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)
 4. வேக வைத்த சிக்கன்-200 கிராம்
 5. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
 6. மிளகாய் பொடி-3 ஸ்பூன்
 7. கரம் மசாலா-1 ஸ்பூன்
 8. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
 9. சீரக தூள்-2 ஸ்பூன்
 10. எண்ணெய்-தாளிக்க
 11. உப்பு- தேவைக்கு
 12. கோட்டிங்கிற்கு:
 13. முட்டை-2
 14. கார்ன் ஃப்ளார் பொடி-2 டேபிள் ஸ்பூன்
 15. மிளகு தூள்-1 ஸ்பூன் -
 16. உப்பு-தேவைக்கு
 17. சமோசா ஷீட் செய்ய தேவையான பொருட்கள்:
 18. மைதா அல்லது கோதுமை மாவு -1கப்
 19. மிளகாய் பொடி -1ஸ்பூன்
 20. பட்டர்- 2ஸ்பூன்
 21. தண்ணீர்- தேவைக்கு
 22. எண்ணெய்- பொரிப்பதற்கு
 23. உப்பு- தேவைக்கு
 24. அரிசி மாவு- தூவுவதற்கு

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் போட்டூ வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கி உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்க்கவும்.
 2. பின்பு சிக்கனை கையால் பிசைந்து சேர்க்கவும்.உ.கிழங்கு மற்றும் பட்டானியை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும். ரோலிற்கு தேவையான மசாலா தயார்.
 3. முட்டையை அடித்து வைத்து கொள்ளவும். முட்டையுடன் கார்ன் ஃப்ளார் பொடி, மிளகு தூள்,உப்பு-தேவைக்கு சேர்த்து வைக்கவும்.
 4. சமோசா ஷீட் செய்யும் முறை: ஷீட் செய்ய கூறியவற்றில் எண்ணெய், அரிசி மாவு தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திகு பிசைந்நு வைத்துக் கொள்ளவும்.30 நிமிடம் ஊற வைக்கவும்.
 5. பின்பு சிறு உருண்டை எடுத்து பூரி அளவு சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும். இப்படி 5 பூரி தட்டிக் கொள்ளவும்.
 6. பின் ஒரு பூரி மாவின் மேல் எண்ணெய் தேய்த்து அரிசி மாவு தூவவும். அதற்கு மேல் இன்னொரு பூரி மாவை வைத்து எண்ணெய் தேய்த்து அரிசி மாவ தூவவும் . இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக 5 செய்யவும்.
 7. பின் ஐந்தையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி போல் பெரியதாக வீசி காய்ந்த தோசை கல்லில் இரு புறமும் லேசாக வாட்டி எடுக்கவும். பின் அதன் கரைகளை வெட்டவும். வெட்டிய பின்பு தானாக ஷீட் தனியே பிரிந்து வரும்.
 8. பின் ஷீட்டை நான்கு புறமும் வெட்டி சதுரமாக எடுத்து கொள்ளவும். ஷீட் தயார்.
 9. த்ரெட் செய்முறை: ஷீட்டை எடுத்து நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
 10. பின்பு சிக்கன் கலவையை உருண்டையாகவோ, சதுரமாகவோ பிடித்து முட்டை கலவையில் முக்கி வெட்டிய ஷீட் துண்டுகளை வைத்து சுற்றி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்