வீடு / சமையல் குறிப்பு / கைம்மா பூரி

Photo of Keema poori by Margaret Charles at BetterButter
502
4
0.0(0)
0

கைம்மா பூரி

Dec-08-2017
Margaret Charles
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கைம்மா பூரி செய்முறை பற்றி

சாதாரண கைம்மா கறியும் பூரியும் சேர்ந்து ஒரு அசாதாரண உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கைம்மா கறி 100 கி
  2. கோதுமை மாவு 1 கப்
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தே க
  5. மஞ்சள் தூள் 1/2 தே க
  6. வத்தல் தூள் 1 தே க
  7. சீரக தூள் 1/2 தே க
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு சேர்த்து பூரிக்கு மாவு பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. கைம்மா கறி சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும்
  5. பின்னர் மஞ்சள் தூள், வத்தல் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. எண்ணெய் பிரிந்து வரும் போது சீரக தூள் சேர்த்து வதக்கவும்
  7. பூரிகள் தேய்த்து இந்த கலவையை ஒரு பாதியில் வைத்து மறு பாதியை மடித்து ஓரங்களை ஒட்டி பொரித்து எடுக்கவும்
  8. புதினா எலுமிச்சை சட்னி தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்