Photo of Ice cream by neela karthik at BetterButter
666
5
0.0(0)
0

Ice cream

Dec-08-2017
neela karthik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Ice cream செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஐஸ் க்ரீம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரை 3/4 கப் ( 150 கிராம்)
  2. பால் 1 லிட்டர் (தண்ணீர் கலக்காமல்)
  3. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 டேபிள் ஸ்பூன்
  4. முட்டை 3 ( மஞ்சள் கரு மட்டும்)
  5. வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
  2. பாலின் அளவு பாதியாக குறையும் வரை( சுண்ட) காய்ச்சவும்.
  3. அடி பிடிக்காமல் அவ்வபொழுது கிளறி விட வேண்டும்.
  4. குறைந்தது 35 முதல் 40 நிமிடம் ஆகும்.
  5. பாலை காய்ச்சியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. ஒரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கரு சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  7. அதன் நிறம் லேசான மஞ்சளாக மாறும். 5 முதல் 7 நிமிடம் ஆகும்.
  8. பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை சேர்க்கலாம்.
  9. பிறகு இதை காய்ச்சிய பாலில் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  10. முட்டை சர்க்கரை கலவையை முழுவதுமாக சேர்த்ததும் அடுப்பில் வைத்து ஆன் செய்யவும்.
  11. நன்றாக கொதிக்க விடவும். சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.
  12. 5 முதல் 7 நிமிடம் வரை ஆகும்.
  13. பிறகு அடுப்பை அணைத்து இறக்கி விட்டு வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்.
  14. நன்றாக கலக்கி விட்டு வடிகட்டி கொள்ளவும்.
  15. ஆற வைத்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் ஊற்றி ப்ரீசரில் 3 மணிநேரம் வைக்கவும்.
  16. 3 மணிநேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் அடிக்கவும்.
  17. பின் மீண்டும் ப்ரீசரில் வைக்கவும் இதே போன்று மீண்டும் 3 மணிநேரம் கழித்து இதே போன்று செய்யவும்.
  18. இதே போன்று 4 முறை செய்யவும்.
  19. இறுதியில் நன்றாக கெட்டியாகி விடும்.ஐஸ் க்ரீம் தயார்.
  20. பிறகு பறிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்