வீடு / சமையல் குறிப்பு / கீமா முர்தபாக்

Photo of Keema Murthaba by Rabia Hamnah at BetterButter
759
2
0.0(0)
0

கீமா முர்தபாக்

Dec-08-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கீமா முர்தபாக் செய்முறை பற்றி

எப்பொழுதும் சப்பாத்தி நான் என்று இல்லாமல் சற்று மாறுதலுக்கு இப்படி ட்ரை பன்னி பார்ப்போமே.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சப்பாத்திக்கு தேவையானவை:
  2. கோதுமை மாவு - 2 கப்
  3. பால்- 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. சுடு தண்ணீர்- தேவையான அளவு
  6. ஸ்டஃபிங்கிற்கு தேவையானவை:
  7. மட்டன் கைமா - 1/2 கி
  8. பெரிய வெங்காயம் - 4
  9. தக்காளி - 2
  10. மிளகு தூள்- 4 ஸ்பூன்
  11. மிளகாய் தூள்-4 ஸ்பூன்
  12. கரமசாலா-1 ஸ்பூன்
  13. சீரகதூள்-4 ஸ்பூன்
  14. மசலா பொடி- 3 ஸ்பூன்
  15. மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி இலை- தேவைக்கு
  17. எண்ணெய்- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  18. நெய்-2 டேபிள் ஸ்பூன்
  19. இஞ்சிபூண்டு விழுது- 2 டீஸ்பூன்
  20. எலுமிச்சை சாறு- 3ஸ்பூன்
  21. முட்டை-5
  22. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் சப்பாத்தி மாவிற்கு கூறியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
  2. பின்பு வானலியில் எண்ணெய் விட்டு காய வைக்கவும். காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்பு கைமாவை சேர்த்து விட்டு மற்ற எல்லா மசாலாபொடிகளையும் சேர்த்து உப்பு சேர்த்து வதங்கவிடவும். தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  4. நன்றாக வெந்து சுருண்டு வரும் பொழுது எலுமிச்சை சாறு, மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
  5. முட்டையுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும்
  6. பரோட்டா செய்முறை :
  7. பிசைந்த மாவை உருண்டை பிடித்து வைக்கவும் சப்பாத்தி கட்டையில் ஒவ்வொரு உருன்டைகளையும் மிக மெல்லியதாக வீசி வைக்கவும்.
  8. பின்பு தோசை கல்லை காய வைத்து எண்ணெய் விடாமல் வீசிய பரோட்டா மாவை லேசாக இரு புறமும் வாட்டி எடுத்து வைத்து கொள்ளவும். இப்படி எல்லா மாவையும் வாட்டி வைக்கவும்.
  9. ஸ்டஃபிங் செய்முறை:
  10. தோசை கல்லை காய வைத்து நெய்+எண்ணெய் சேர்த்து 1/2 கரண்டி முட்டை கலவை ஊற்றி மேலே கைமா கலவை கொஞ்சம் வைத்து வாட்டிய சப்பாத்தியை மேலே போடவும்.
  11. பின்பு பிரட்டி நான்கு ஓரங்களையும் மூடி எண்ணெய்+நெய் சேர்த்து பிரட்டவும். இப்படி முருகும் வரை பிரட்டி கொன்டே இருக்கவும்.
  12. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்