வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ஃபலாபெல் வித் பீட்ரூட் டிப்

Photo of Vegetable Falafel with Beetroot Dip by Sowmya Sundar at BetterButter
455
3
0.0(0)
0

வெஜிடபிள் ஃபலாபெல் வித் பீட்ரூட் டிப்

Dec-08-2017
Sowmya Sundar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ஃபலாபெல் வித் பீட்ரூட் டிப் செய்முறை பற்றி

பார்ட்டியை ஆரம்பிக்க ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய முட்டைகோஸ் - 1/4 கப்
  2. நறுக்கிய காலிஃப்ளவர்- 1/4 கப்
  3. நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்
  4. வெள்ளை கொண்டைக்கடலை- 1 கப்
  5. பூண்டு- 3 பல்
  6. சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்
  7. தனியா தூள்- 1 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  10. மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்
  11. கொத்தமல்லி,புதினா- ஒரு கைப்பிடி
  12. எண்ணெய்- பொரிக்க
  13. பீட்ரூட் டிப் செய்ய:
  14. பீட்ரூட்- 1/2 கப்
  15. வெங்காயம்- 1 சிறியது
  16. பச்சை மிளகாய்- 1
  17. சீரக தூள்- 1/4 டீஸ்பூன்
  18. மிளகு- 1/4 டீஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு
  20. எலுமிச்சை சாறு- 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  2. 12 மணி நேரம் ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு ஒரு மிக்ஸியில் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. பின்னர் காய்கறிகள் சேர்ந்த ஒரு முறை மிக்ஸியில் கலக்கும் படி அரைத்து கொள்ளவும் .
  4. கெட்டியாக மசால் வடை பதத்தில் இருக்க வேண்டும்
  5. சிறிது நீர்த்து இருந்தால் சிறிது மைதா மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை சிறிய அளவில் உருண்டைகளாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
  7. பீட்ரூட் டிப் :
  8. பீட்ரூட் டிப் செய்ய கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் லேசாக வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்