வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெரி அண்ட் குக்கீஸ் டெஸர்ட்

Photo of Strawberry and Cookies Dessert by Ayesha Ziana at BetterButter
25
2
0.0(0)
0

ஸ்ட்ராபெரி அண்ட் குக்கீஸ் டெஸர்ட்

Dec-08-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெரி அண்ட் குக்கீஸ் டெஸர்ட் செய்முறை பற்றி

ஸ்ட்ராபெரி மற்றும் குக்கீஸ் வைத்து செய்த எளிமையான லேயர் டெஸர்ட்.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • டின்னெர் பார்ட்டி
 • சிம்மெரிங்
 • சில்லிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. ஸ்ட்ராபெரி 10 அல்லது தேவைக்கேற்ப
 2. மில்க் மெய்ட் தேவைக்கு
 3. குக்கீஸ் லேயர் செய்ய: பால் 1 கப் அல்லது தேவைக்கு
 4. சீனி தேவைக்கு
 5. பட்டை தூள் ஒரு சிட்டிகை
 6. சாக்லேட் குக்கீஸ் 3 அல்லது 4
 7. சாக்லேட் சாஸ் செய்ய: கோகோ பவுடர் 1/2 கப்
 8. சீனி தேவைக்கேற்ப
 9. தண்ணீர் 1 முதல் 1 1/4 கப்
 10. உப்பு ஒரு சிட்டிகை
 11. வெனிலா எஸ்ஸென்ஸ் சில துளிகள்

வழிமுறைகள்

 1. குக்கீஸ் லேயர் செய்ய: ஒரு பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைத்து, சீனி சேர்த்து கரைத்து, குக்கீஸ்களையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். குக்கீஸ் நன்றாக ஊறியதும், அடுப்பை அணைத்து, நன்றாக மசிக்கவும். பட்டை தூளையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
 2. சாக்லேட் சாஸ் செய்ய: வேறு ஒரு பாத்திரத்தில் எஸ்ஸென்ஸ் தவிர அனைத்தும் சேர்த்து மிதமான தீயில் கிளறி கொண்டே இருக்கவும். சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்.
 3. நன்றாக கலந்து ஆற விடவும். சாஸ் தயார். இதை பிரிட்ஜில் சில நாட்கள் கூட வைக்கலாம். உடனே பயன் படுத்துவதாக இருந்தால் தண்ணீருடன் சிறிது பால் கூட சேர்க்கலாம்.
 4. டெஸர்ட் லேயர் செய்ய: உயரமான க்ளாஸ்களை எடுத்து கொள்ளவும். முதலில் பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெரி பழங்களை போடவும். அதன் பின்னர் குக்கீஸ் கலவை போடவும். அதன் மேல் சிறிது மில்க் மெய்ட் ஊற்றவும்.
 5. இப்படியே மீண்டும் ஒரு முறை செய்யவும். இறுதியாக சாக்லேட் சாஸ் ஊற்றி, நறுக்கிய ஸ்ட்ராபெரி பழங்கள் தூவி அலங்கரிக்கவும். பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.
 6. அட்டகாசமான சுவையுடன் ஸ்ட்ராபெரி அண்ட் குக்கீஸ் டெஸர்ட் தயார். இது பார்ட்டிக்கு ஏற்ற டெஸ்ர்ட். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்