வீடு / சமையல் குறிப்பு / பேபி கார்ன் மசாலா

Photo of Baby Corn Masala by Krishnasamy Vidya Valli at BetterButter
717
2
0.0(0)
0

பேபி கார்ன் மசாலா

Dec-09-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பேபி கார்ன் மசாலா செய்முறை பற்றி

சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் வகை இது. இதையே ஒன் பாட் ஒன் டிஷ் ஆகவும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பேபிகார்ன் - 3
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  6. மஞ்சள்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  9. ஆம்சூர் பவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  10. காஷ்மீர்சில்லிபவுடர்-1/4தேக்கரண்டி
  11. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  12. பட்டை - 1 சிறிய துண்டு
  13. பே லீஃப்-1சிறியதுண்டு
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  15. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  16. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பேபிகார்ன் தோல் உரித்து நறுக்கி வைக்கவும், வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும்
  2. வெங்காயம் மற்றும் தக்காளியை தனிதனியே மிக்ஸியில் அரைக்கவும்.
  3. கடாயில் நெய் விட்டு சீரகம், பட்டை, ஏலக்காய் கிராம்பு பே லீஃப் சேர்த்து தாளிக்கவும்.
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அரைத்து வெங்காய விழுதை சேர்க்கவும்.
  5. பச்ச வாசனை போனவுடன் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  6. உப்பு, மஞ்சள்பொடி, காஷ்மீர் சில்லிபவுடர், ஆம்சூர் பவுடர், தனியா பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கிளறவும்..
  7. பேபிகார்ன் சேர்த்து மூடி பத்து நிமிடம் வரை வேகவிடவும்.
  8. கிரேவி கெட்டியாகி பேபிகார்ன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பேபிகார்ன் மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்