வீடு / சமையல் குறிப்பு / கோபி பிரைய்டு ரைஸ்

Photo of Gobi Fried Rice by Geetha Sivanesan at BetterButter
938
2
0.0(0)
0

கோபி பிரைய்டு ரைஸ்

Dec-09-2017
Geetha Sivanesan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோபி பிரைய்டு ரைஸ் செய்முறை பற்றி

முதலில் ஒரு பாத்திரத்தில் கலைந்த அரிசி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். அதற்குள் சுத்தம் செய்து வைத்துள்ள காளி பிலோவ்ர் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து 20 நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். குக்கரில் அரிசியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் வேகவைத்த சாதத்தை கலக்கவும். கடைசியாக பொறித்த காளி பிலோவேர் சேர்த்து கலந்து பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி அரிசி = 1 கப்
  2. நறுக்கிய காய்கறிகள் (கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் = 1/2 கப்)
  3. காலி பிளவர் = 1
  4. சோயா சாஸ் 2 மேஜை கரண்டி
  5. தக்காளி சாஸ் 2 மேஜை கரண்டி
  6. மிளகு தூள் 1/2 கரண்டி
  7. மிளகாய் தூள் 1/2+1/2
  8. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  9. தண்ணீர் (அரிசியை வேகவைக்க 1.5 கப்
  10. கோபி பொரிக்க தேவையான பொருட்கள்
  11. காலி பிளவர் 1
  12. மைதா மாவு 1/4 கப்
  13. சொலமாவு 1/4 கப்
  14. இஞ்சி பூண்டு 1/2 தே கரண்டி
  15. மிளகாய் தூள் 1/2 தே கரண்டி
  16. உப்பு தே அளவு
  17. சிகப்பு கலர் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கலைந்த அரிசி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. அதற்குள் சுத்தம் செய்து வைத்துள்ள காலிப்ளவர் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து 20 நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. குக்கரில் அரிசியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் வேகவைத்த சாதத்தை கலக்கவும். கடைசியாக பொறித்த காலிப்ளவர் சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்