காய்கறி பர்கர் | Veg Burger in Tamil

எழுதியவர் Sukhmani Bedi  |  24th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Veg Burger by Sukhmani Bedi at BetterButter
காய்கறி பர்கர்Sukhmani Bedi
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

4011

0

Video for key ingredients

  • Homemade Mayonnaise

காய்கறி பர்கர் recipe

காய்கறி பர்கர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg Burger in Tamil )

  • 2 பிரெட் துண்டுகள்
  • 2 கப் வேகவைத்தக் காய்கறிகள்
  • 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • சுவைக்கேற்ற உப்பு
  • பிரெட் தூள்
  • எண்ணெய்
  • 4 பர்கர் பன்
  • லேட்டியூஸ் இலைகள்
  • 2 தக்காளி நறுக்கியது
  • மையோனைஸ்
  • சிவப்பு மிளகாய்த் தூள்

காய்கறி பர்கர் செய்வது எப்படி | How to make Veg Burger in Tamil

  1. பிரெட்டைத் தண்ணீரில் ஊறவைத்து பிழிந்துகொள்க
  2. வேகவைத்தக் காய்கறி, உருளைக்கிழங்கு, இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, பிரெட்டை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க.
  3. கலவையை தட்டையான உருண்டைகளாக வடிவமைத்துக்கொள்க
  4. பிரட் தூளை அதன்மீது தடவவும்
  5. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கட்லெட்டுகளை வறுக்கவும்
  6. பன்களை கிடைமட்டத்தில் இரண்டாகப் பிளந்துகொள்க.
  7. மையோனைசை இரு பக்கங்களில் தடவுக. பன்னின் கீழ் பாகத்தில் கட்லெட்டை வைக்கவும்
  8. இறுதியாக லேட்டியூஸ் இலைகளை பன் மீது வைத்து பன்னின் மேல் பக்கத்தால் மூடுக.
  9. பர்கரை 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து காபியோடு பரிமாறவும்.

Reviews for Veg Burger in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.