வீடு / சமையல் குறிப்பு / ஷீர் குர்மா

Photo of Sheer khurma by Asiya Omar at BetterButter
334
3
0.0(0)
0

ஷீர் குர்மா

Dec-10-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஷீர் குர்மா செய்முறை பற்றி

உலக பிரசித்தமான மெல்லிய வறுத்த சேமியா கொண்டு செய்யும் ஹைதராபாத் இனிப்பு ரெசிப்பி. ஈத்,இப்தார் பார்ட்டிகளில் நிச்சயம் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • ஹைதராபாத்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மெல்லிய வறுத்த சேமியா - 100 -150 கிராம்
  2. பால் -ஒன்னரை லிட்டர்
  3. ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின் சுமார் 350 கிராம் ( தேவைக்கு)
  4. அல்லது சீனி - ஒரு கப்
  5. நெய் -50 மில்லி
  6. ஊற வைத்து நறுக்கிய பாதாம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
  7. ஊற வைத்து நறுக்கிய பிஸ்தா பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
  8. சாரப் பருப்பு -2 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
  9. முந்திரி பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
  10. கிஸ்மிஸ் - 2 டேபிள்ஸ்பூன்
  11. ஏலக்காய் பொடிக்க -6
  12. உப்பு -பின்ச்
  13. சாப்ரான் -2 பின்ச்.

வழிமுறைகள்

  1. முதலில் சிறிது நெய் சேர்த்து சேமியாவை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. தேவையான அனைத்து பொருட்களும் தயாராய் இருக்கட்டும்.
  3. பாலை நன்கு காய்ச்சி , சாப்ரான் ,ஏலப் பொடி சேர்த்து சிம்மில் கால் மணி நேரம் வற்ற வைக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தாவை கொதித்து வற்றி வரும் பாலில் .10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  5. வறுத்த சேமியாவை சேர்க்கவும்.10 நிமிடம் சிம்மில் வேகட்டும்.
  6. இனிப்பிற்கு சீனி அல்லது மில்க் மெய்ட் சேர்க்கவும்.
  7. நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து தயார் ஆன ஷீர் குர்மாவில் சேர்க்கவும்.
  8. கலந்து விடவும். அழகான பவுலில் விரும்பியவண்ணம் நட்ஸ் அலங்கரித்து பரிமாறவும்.
  9. சுவையான ஷீர் குர்மா தயார்.பார்ட்டியில் இனிப்பிற்கு பரிமாறி அசத்தலாம்.
  10. கெட்டியாக இருந்தால் கொதிக்கும் நீர் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்