காய்கறி மஞ்சூ சூப் | Vegetable Manchow Soup in Tamil

எழுதியவர் Jyothi Rajesh  |  22nd Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vegetable Manchow Soup by Jyothi Rajesh at BetterButter
காய்கறி மஞ்சூ சூப்Jyothi Rajesh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

3142

0

காய்கறி மஞ்சூ சூப் recipe

காய்கறி மஞ்சூ சூப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable Manchow Soup in Tamil )

 • 2 கேரட்
 • 10 பச்சைப் பட்டாணி
 • 25 கிராம் (1/4 கப்) முட்டைக்கோஸ்
 • 25 கிராம் (1/4 கப்) வெள்ளை வெங்காயத் தாள்
 • 1 தேக்கரண்டி இஞ்சி
 • 1 தேக்கரண்டி பூண்டு
 • 1 தேக்கரண்டி அடர் சோயா சாஸ்
 • 1 தேக்கரண்டி வெள்ளை வெனிகர்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
 • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
 • 1 தேக்கரண்டி சோள மாவு
 • 1/4 கப் தண்ணீர் + கூடுதலாக
 • பச்சை வெங்காயத் தாள் அலங்கரிப்பதற்காக
 • 1/2 கப் வறுத்த நூடுல்ஸ்

காய்கறி மஞ்சூ சூப் செய்வது எப்படி | How to make Vegetable Manchow Soup in Tamil

 1. காய்கறிகளைக் கழுவி (வெங்காயம், இஞ்சி, பூண்டு, கேரட். பட்டாணி, முட்டைக்கோஸ்) பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
 2. ஒரு வானலியைச் சூடுபடுத்திக்கொள்க. இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைச் சூடான எண்ணெயில் சேர்க்கவும். வெங்காயம் பிங்க் நிறமாக மாறும்வரை வதக்கவும்.
 3. பொடியாக நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் உப்பு மிளகுத்தூளோடு சேர்த்துக்கொள்ளவும். உயர் தீயில் கிட்டத்தட்ட 3ல் இருந்து 4 நிமிடங்கள் சமைக்கவும்.
 4. அடுத்து சோயா சாஸ், வெனிகரைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும். தேவையானத் தண்ணீர் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
 5. தண்ணீரில் சோளமாவைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்துகொள்ளவும். தொடர்ந்து கலந்தபடி இதை சூப்பில் ஊற்றிக்கொள்க. சிம்மில் மேலும் 3ல் இருந்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
 6. நூடுல்சைத் தண்ணீர் பேக்கெட்டில் உள்ள அறிவுறுத்தலின்படி வேகவைத்து வடிக்கட்டிக்கொள்க. நூடுல்சை சூடான எண்ணெயை மொறுமொறுப்பாகும்வரை வறுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு பேப்பர் துண்டில் வடிக்கட்டிக்கொள்ளவும்.
 7. சூப் தயாரானதும், சுவைக்கேற்றபடி உப்பு காரம் சரிசெய்து அடுப்பை நிறுத்தவும்.
 8. இந்த சூப்பைப் பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி மேலே வறுத்த நூடுல்சையும் பச்சை வெங்காயத் தாளையும் வைக்கவும். உடனே பரிமாறவும்.

எனது டிப்:

இந்தச் சூடான சூப்பில் ஊறிய முமுறுப்பான நூடுல்ஸ் இந்தக் காய்கறி சூப்பை உறிஞ்சிக் குடிப்பதற்கு சுவாசஷ்யமாக்குகிறது.

Reviews for Vegetable Manchow Soup in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.