வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சீஸ் பிட்ஸா

Photo of Chicken Cheese Pizza by fathoom hameed at BetterButter
245
6
0.0(0)
0

சிக்கன் சீஸ் பிட்ஸா

Dec-10-2017
fathoom hameed
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சீஸ் பிட்ஸா செய்முறை பற்றி

பார்ட்டி உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • இத்தாலிய
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 2 கப்
  2. சீனி 1 மேஜைக்கரண்டி + 1 தேக்கரண்டி
  3. உப்பு 1/2 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
  4. ஈஸ்ட் 1 தேக்கரண்டி
  5. ஆலிவ் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  6. வெதுவெதுப்பான தண்ணீர் 1 கப்
  7. தக்காளி 4
  8. பூண்டு 6 பல்
  9. குடைமிளகாய் 1 + 2 (சிறியது)
  10. ஓரிகானோ 1 தேக்கரண்டி + 2 தேக்கரண்டி
  11. கோழி 250 கிராம்
  12. இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
  13. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  14. தயிர் 1 மேஜைக்கரண்டி
  15. தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி
  16. உப்பு (தேவைக்கேற்ப)
  17. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  18. சீஸ் 250 கிராம்
  19. வெங்காயம் 1 (வட்டமாக நறுக்கியது)

வழிமுறைகள்

  1. 2 கப் மைதாவுடன் 1 தேக்கரண்டி ஈஸ்ட், 1 மேஜைக்கரண்டி சீனி, 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து வெதுவெப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து இறுதியாக ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
  2. பிட்ஸா சாஸ் செய்வதர்க்கு: 4 தக்காளியில் கீரல் இட்டு வெண்ணீரில் போட்டு தோல் நீக்கி 2 தக்காளியை நறுக்கி 2 தக்காளிையை அரைத்துக்கொள்ளவும்.
  3. 1 குடைமிளகாயை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டையும் தோல் நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு வானலியில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய் போட்டு தாளித்து அரிந்த தககாளி, அரைத்த தக்காளி போட்டு 1/2 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி சீனி, 1 தேக்கரண்டி ஓரிகனோ போட்டு சுன்டி வந்ததும் இறக்கவும்.
  5. கோழியுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரமசாலா, தயிர், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊர வைத்து வரட்டிக் கொள்ளவும்.
  6. பிட்ஸா செய்யும் முறை: பேக் செய்யும் தட்டில் எண்ணெய் தடவி மாவை பரப்பிக்கொள்ளவும்.
  7. மாவின் மேல் தயார் செய்து வைத்த சாஸ் தடவி, அதன் மேல் ஒரிகானோ துவி அதன் மேல் சீஸ் துருவி போடவும்.
  8. பின் வரட்டிய கோழி போட்டு, வட்ட வடிவில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய குடைமிளகாய் போட்டு அதன் மேல் சீஸ், ஓரிகானோ போட்டு 200 டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்