வீடு / சமையல் குறிப்பு / ஸ்டராபெர்ரி சீஸ் கேக் பாராஃபேட்

Photo of Strawberry Cheesecake Parafait by fathoom hameed at BetterButter
265
4
0.0(0)
0

ஸ்டராபெர்ரி சீஸ் கேக் பாராஃபேட்

Dec-10-2017
fathoom hameed
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டராபெர்ரி சீஸ் கேக் பாராஃபேட் செய்முறை பற்றி

கேக், ஸ்டராபெர்ரி கொண்டு செய்யப்பட்ட இனிப்பு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 4 மேஜைக்கரண்டி
  2. சீனி 2 மேஜைக்கரண்டி
  3. கோக்கோ பவுடர் 2 மேஜைக்கரண்டி
  4. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  5. பால் 4 மேஜைக்கரண்டி
  6. பேக்கிங் பவுடர் 1/2 தேக்கரண்டி
  7. சாக்லேட் சிப்ஸ் ( ஒரு கைபிடி அளவு)
  8. நியூடெல்லா 3 மேஜைக்கரண்டி
  9. ஸ்டராபெர்ரி 1 கப்
  10. ஐசிங் சீனி 2 தேக்கரண்டி + 1/4 கப்
  11. விப்பிங் கிரீம் 1/4 கப்
  12. கிரீம் சீஸ் 1/4 கப்
  13. வேஃபர் குச்சி (தேவையான அளவு) அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. மைதா மாவு, சீனி, கொக்கா பவுடர், பேகிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து அதில் பால், எண்ணெய் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
  2. இந்த கலவையில் நியூடெல்லா மற்று சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து மைக்ரோவேவ் கப்பில் எண்ணெய் தடவி இந்த கலவையை ஊற்றி 2 நிமிடம் பேக் செய்யவும்.
  3. பேக் செய்த கேக்கை ஆறியதும் கையால் உருட்டி கொள்ளவும்..
  4. ஸ்டராபெர்ரியை சிறிதாக நறுக்கி 2 தேக்கரண்டி ஐசிங் சீனி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
  5. விப்பிங் கிரீமில் 1/4 கப் ஐசிங் சீனி சேர்த்து ஸ்டிஃப் பீக்ஸ் வரும் வரை அடித்து கிரீம் சீஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  6. அரேஞ் செய்யும் முறை: ஒரு கிலாஸில் சிறிது கேக்கை முதலில் போட்டு பின் விப்பிங் கிரீம், கிரீம் சீஸ் கலவையை கொஞ்சம் வைத்து பின் ஸ்டராபெர்ரி போட வேண்டும்.
  7. கிளாசின் அளவை பொறுத்து இதை மறுமுறை செய்து இறுதியாக விப்பிங் கிரீமீல் சிரிதளவு உருட்டிய கேக் சேர்த்து மேலே பைப் செய்து குளிரூட்டி வேஃபர் குச்சிகொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்