வீடு / சமையல் குறிப்பு / சென்னா ஆலு மசாலா

Photo of Chenna aloo masala by Krishnasamy Vidya Valli at BetterButter
384
3
0.0(0)
0

சென்னா ஆலு மசாலா

Dec-10-2017
Krishnasamy Vidya Valli
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா ஆலு மசாலா செய்முறை பற்றி

பூரியுடன் சாப்பிட ஏற்ற சைட்டிஷ் இது பார்ட்டியில் இந்த மசாலா செய்தால் பூரி சப்பாத்தி ரைஸ் இப்படி எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் . இதையே ஒன் பாட் ஒன் டிஷ் ஆகவும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்ட கடலை/சென்னா - 1 கப்
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. உருளைக்கிழங்கு - 2
  5. பச்ச மிளகாய் - 1
  6. வெண்ணெய் / எண்ணெய் - 4 தேக்கரண்டி
  7. கிராம்பு ஏலக்காய் - தலா 3
  8. பட்டை - 1 சிறிய துண்டு
  9. சீரகம் - 1 தேக்கரண்டி
  10. பே லீஃப் - 1 சிறிய துண்டு
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  12. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  13. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  14. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  15. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  16. ஆம்சூர் பவுடர் - 1 தேக்கரண்டி
  17. மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
  18. சீனி-1/2தேக்கரண்டி
  19. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  20. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்ட கடலை யை ஆறு மணி நேரம் வரை ஊறவைத்து வேக வைக்கவும்
  2. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கி வைக்கவும்
  3. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் / வெண்ணெய் சேர்த்து கிராம்பு பட்டை ஏலக்காய் சீரகம் பே லீஃப் தாளிக்கவும்
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பச்ச வாசனை போனவுடன் வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதக்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள்பொடி உப்பு தனியா பொடி கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் சீனி சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. வேக வைத்த உருளைகிழங்கை சேர்க்கவும்
  9. நன்றாக வதக்கியபின் வேகவைத்த கொண்ட கடலை சேர்த்து நன்றாக கிளறவும்
  10. சிறிதுதண்ணீர்சேர்த்துகொதிக்கவிடவும்
  11. கிரேவி கெட்டியாகி வரும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்
  12. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் சுவையான சென்னா ஆலு மசாலா தயார்
  13. ரைஸ்/ரொட்டி /சப்பாத்தி / பூரியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்