வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Photo of Chettinaad chicken biriyani by Adaikkammai Annamalai at BetterButter
314
10
0.0(0)
0

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Dec-11-2017
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான ஒன்று...... செட்டிநாடு பகுதியில் பிரியாணிக்கு சேர்க்கும் அனைத்து பொருளையும் அரைத்து விடுவார்கள்.... கருவேப்பிலையை கூட அரைத்து வைத்து தான் உபயோகிப்பார்கள் ..... அல்லது பொடி செய்து வைத்து உபயோகிக்கலாம் ... ஏனென்றால் அதில் சத்துகள் வெகுவாக இருக்கின்றன ... எனவே அதை தூக்கி ஏரியக்கூடாது என்பதற்க்காக இப்படி செய்வார்கள்...... நான் இதில் கருவேப்பில்லை.., பூண்டு.., அனைத்தையும் தனி தனியாக அரைத்து எடுத்து வைத்துள்ளேன்.....

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி -1 கப்
  2. தேங்காய் பால் கெட்டியாக - 1 கப்
  3. நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
  4. தக்காளி - 2
  5. கருவேப்பில்லை நன்கு காய வைத்து பொறுபொறுப்பாக வந்த பின் பொடியாக்கி வைத்து கொள்ளலாம். இல்லையென்றால் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து கொள்ளலாம் .... - 2 ஸ்பூன்
  6. எண்ணெய் -5 ஸ்பூன்
  7. பட்டை - 1
  8. இலவங்கம் -2
  9. கிராம்பு - 2
  10. ஏலக்காய் - 2
  11. தண்ணீர் - தேவையான அளவு
  12. உப்பு - சிறிது
  13. #அரைத்து_எடுக்க_வேண்டிய_பொருட்கள்: சோம்பு -. 1 ஸ்பூன் முந்திரி - 3 பச்சை மிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்றார் போல்) இஞ்சி - சிறுதுண்டு வெங்காயம் - சிறிதளவு தக்காளி - சிறிதளவு இவை அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் பால் கெட்டியாக எடுத்து கொள்ளவும்.
  2. பின் அரைத்து எடுக்கவேண்டிய அனைத்தையும் அரைத்து எடுத்துகொள்ள வேண்டும்.
  3. அதன் பிறகு கோழியை நன்றாக எலுமிச்சை..,மஞ்சத்தூள்... தயிர் போட்டு நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின் சோம்பு -1 ஸ்பூன்.., சீரகம் 1 ஸ்பூன் .., இஞ்சி சிறு துண்டு..., மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்.., மிளாகாய் -2 ..,போட்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து கோழியில் போட்டு நன்றாக முழுவதுமாக பிரட்டி அரை மணி நேரம் அதை ஊற வைத்து கொள்ளுங்கள்
  5. பின் அதை எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளவும்.
  6. அதன் பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் 5 ஸ்பூன் ஊற்றி அதில் கிராம்பு.., பட்டை.., இலவங்கம் ஏலக்காய் போட்டு பொரிய விடவும்....
  7. பொறிந்த பின் வெங்காயம் -2 ., தக்காளி - 2., பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் .., கருவேப்பிலை பேஸ்ட்- 1 ஸ்பூன் .., புதினா - சிறிதளவு.., உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  8. நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை கொட்டி கொதிக்க விடவும்...
  9. பின் அதில் கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  10. பின் அதில் வறுத்த கோழியை போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு
  11. பின் அதில் பாசுமதி அரிசியை கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை வேக்காடக வேக விட வேண்டும்.
  12. பின் அரை வேக்காடாக வெந்த பின் கூக்கரில் அடியில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரூ பாத்திரத்தில் வெந்த பிரியாணியை அள்ளி வைக்கவும் கீழே உள்ளது போல்.... குக்கரை மூடி 3 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்கவும்
  13. ஒரு அகல பாத்திரத்தில் கொட்டி சிறிது கொத்தமல்லி தூவி மெதுவாக கிளறி பரிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்