வீடு / சமையல் குறிப்பு / கீரை மசியல்

Photo of Keerai masiyal in different way by Adaikkammai Annamalai at BetterButter
462
8
0.0(0)
0

கீரை மசியல்

Dec-11-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீரை மசியல் செய்முறை பற்றி

இந்த கிரை மசியல் கசக்காது.... குழந்தைகளுக்கு குடுத்தால் வேண்டாம் என்றே சொல்லமாட்டர்கள் .. அவ்வளவு ருசியாக இருக்கும் இந்த மசியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி/சிறு பருப்பு - ஒரு கை அளவு
  2. கீரை - 1 கட்டு
  3. பூண்டு -2 பல்
  4. எண்ணெய் -2 ஸ்பூன்
  5. கடுகு -1/2 ஸ்பூன்
  6. உளுந்து -1 ஸ்பூன்
  7. சீரகம் -1 ஸ்பூன் (பருப்பு வேக வைக்கும் பொழுது போட) ( 1 ஸ்பூன் தாளிக்கும் பொழுது போட)
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை
  9. வெங்காயம் -1 குண்டாக நறுக்கியது
  10. உப்பு - தேவையான அளவு
  11. நெய் - 1 ஸ்பூன் (கட்டாயம் இல்லை) வாசத்துக்க தான்
  12. பால் -1/4 கப்
  13. சர்க்கரை - 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கீரையை நன்கு அலசி எடுத்து அதை பொடிதாக நறுக்கி எடுக்க வேண்டும்
  2. பின் குக்கரில் பாசி/சிறு பருப்பை 2 பல் பூண்டு , சீரகம் சேர்த்து போட்டு வேக வைத்து குழைவாக எடுத்து கொள்ளவும்
  3. பின் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் என்னை ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போட்டு தாளிக்கவும்.
  4. பின் வெங்காயம்.., கீரை.., உப்பு .., சர்க்கரை 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும். கீரை அடங்கி ஒடுங்கி வதங்க வேண்டும்.
  5. வதங்கிய பின் வேகவைத்த பருப்பை கொட்டி கொதிக்க விட்டு அதில் கொஞ்சம் 1/4 கப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கீரை வெந்த பின் இறக்கவும்.
  6. இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றி வேண்டுமானால் ஒரு துளி நெய் விட்டு பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்