வீடு / சமையல் குறிப்பு / பிஸ்தா பிஸ்கட்

Photo of Pista Biscuits by fathoom hameed at BetterButter
569
4
0.0(0)
0

பிஸ்தா பிஸ்கட்

Dec-11-2017
fathoom hameed
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பிஸ்தா பிஸ்கட் செய்முறை பற்றி

மனமான, சுவையான பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா 1 1/2 கப்
  2. பொடித்த முந்திரி பருப்பு தூள் 1/4 கப்
  3. பொடித்த சீனி 1/2 கப்
  4. கஸ்டர்ட் பவுடர் 2 மேஜைக்கரண்டி
  5. பேகிங் பவுடர் 1/2 தேக்கரண்டி
  6. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  7. வெண்ணெய் 160 கிராம்
  8. வென்னிலா எஸன்ஸ் 1/2 தேக்கரண்டி
  9. கெவ்டா எஸன்ஸ் 4 மேஜைக்கரண்டி
  10. பால் 2 மேஜைக்கரண்டி
  11. நறுக்கிய முந்திரி, பிஸ்தா 1/2 கப்

வழிமுறைகள்

  1. மைதா, பொடித்த முந்திரி, கஸ்டர்ட் பவுடர், பேகிங் பவுடர், ஏலக்காய் தூள் இவை அனைத்தையும் சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
  2. வெண்ணெய்யுடன் பொடித்ந சீனி சேர்த்து பீடர் கொண்டு நன்றாக அடித்து அதில் வென்னிலா, கெவ்டா எஸன்ஸ் சேர்க்கவும்.
  3. வெண்ணெய் கலவையுடன் மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து அதனுடன் பால் மற்றும் நறுக்கிய முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்றாக பிசையவும்.
  4. இந்த மாவை நீல வாக்கில் உருட்டி கிலிங் பார்ம் பேப்பரில் சுருட்டி 1 மணிநேரம் குளிரூட்டவும்.
  5. பின் அதை எடுத்து வெட்டி சூடேற்றபட்ட ஓவனில் 180 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்