வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை பாதாம் கிரேவி

Photo of Chickpea in Almond Gravy by Sowmya Sundar at BetterButter
556
2
0.0(0)
0

கொண்டைகடலை பாதாம் கிரேவி

Dec-12-2017
Sowmya Sundar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை பாதாம் கிரேவி செய்முறை பற்றி

பார்ட்டி என்றாலே ரிச்சான உணவு வகைகள் தான். சீரக ரைஸ்,சப்பாத்தி, பூரி என எல்லாவற்றிற்கும் ஏற்ற ரிச் சைட் டிஷ் இது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை கொண்டைகடலை - 1 கப்
  2. பாதாம் பருப்பு- 12
  3. கசகசா- 2 டீஸ்பூன்
  4. வெங்காயம் - 2
  5. தக்காளி- 2
  6. பச்சை மிளகாய்-1
  7. இஞ்சி- 1 துண்டு
  8. பூண்டு- 4 பல்
  9. உப்பு
  10. மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  11. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  12. மல்லி தூள்- 1 டீஸ்பூன்
  13. கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
  14. கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்
  15. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  16. சீரகம்- 1 டீஸ்பூன்
  17. பிரிஞ்சி இலை - 1
  18. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி 10-12 மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும். கசகசாவை சிறிது தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு குக்கரில் ஊற வைத்த கொண்டைகடலையை தண்ணீர் சேர்த்து 5 அல்லது 6 விசில் விட்டு நன்றாக வேக விடவும்.
  3. பாதாம் பருப்பு மற்றும் கசகசாவை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
  5. ஆறியதும் இந்த கலவையை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  6. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பிரிஞ்சி தாளித்து அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் அரைத்த பாதாம் கசகசா விழுதை சேர்த்து சுமார் 5 நிமிடம் வரை வதக்கி பின் வேக வைத்த கடலையை தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  8. அடுப்பை அணைக்கும் முன் கஸ்தூரி மேத்தி தூவி இறக்கவும் .
  9. சுவையான கொண்டைகடலை பாதாம் கிரேவி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்