Photo of Jeera Rice by Sowmya Sundar at BetterButter
670
2
0.0(0)
0

சீரக சாதம்

Dec-12-2017
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீரக சாதம் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் இந்த சுவையான சீரக சாதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி- 1 1/2 கப்
  2. வெங்காயம் - 2
  3. பச்சை மிளகாய்- 1
  4. சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  5. பிரிஞ்சி இலை -1
  6. பட்டை- 1
  7. கிராம்பு- 2
  8. ஏலக்காய்- 2
  9. உப்பு
  10. தண்ணீர்- 3 கப்
  11. நெய்- 2 டேபிள் ஸ்பூன்
  12. முந்திரி பருப்பு- சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்
  2. அரிசியை களைந்து விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி, கிராம்பு, பட்டை,ஏலக்காய் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் அதனுடன் ஊற வைத்த அரிசியை வடித்து சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
  5. பின் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் (மிதமான தீயில்) வந்ததும் இறக்கவும்.
  6. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சிறிது வெங்காயம், முந்திரி பருப்பு வறுத்து அலங்கரிக்கவும்.
  7. சீரக சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்