வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பகாளாபாத் வித் ப்ரஷ் மேங்கோ பிக்கிள்

Photo of Butter bagalabath  with fresh mango pickle by Krishnasamy Vidya Valli at BetterButter
255
3
0.0(0)
0

பட்டர் பகாளாபாத் வித் ப்ரஷ் மேங்கோ பிக்கிள்

Dec-12-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பகாளாபாத் வித் ப்ரஷ் மேங்கோ பிக்கிள் செய்முறை பற்றி

என்னதான் பார்ட்டியில் விதவிதமாக நார்த்இந்தியன் ஐட்டம்ஸ் சாப்பிடாலும் கடைசியில் ஒரு வாய் தயிர் சாதம் மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிடாவிட்டால் பார்ட்டி முடிஞ்சமாதிரியே இருக்காது. அவர்களுக்காக இதோ இந்த பட்டர் கேட் ரைஸ் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி - 1/2 கப்
  2. பால் - 1 1 / 2 கப்
  3. தயிர் - 1 / 2 கப்
  4. வெண்ணெய்-3தேக்கரண்டி
  5. உப்பு - 1/2 தேக்கரண்டி
  6. கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
  7. வெள்ளரி துருவல் - 2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  9. மிளகாய் வத்தல் - 1
  10. பச்ச மிளகாய் - 1
  11. சுக்கு பொடி - 2 சிட்டிகை
  12. பொருங்காயம் - 1 சிட்டிகை
  13. கடுகு - 1 தேக்கரண்டி
  14. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  15. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  16. இஞ்சி - 1 சிறியதுண்டு
  17. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  18. கிஸ்மிஸ் - 2 தேக்கரண்டி
  19. பொடியாக நறுக்கிய மாங்காய் - 1 / 4 கப்
  20. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  21. காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  22. வெந்தயபொடி - 1 / 4 தேக்கரண்டி
  23. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  24. பெருங்காயம் - 2 சிட்டிகை
  25. கடுகு - 1 / 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து 1 1/2 கப் பால் மற்றும்1/2கப்தண்ணீர்சேர்த்து குழைய வேகவைக்கவும்
  2. வெளியே எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும்
  4. நன்றாக கலந்தவுடன் வெண்ணெய் சேர்க்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பச்ச மிளகாய் இஞ்சி மிளகாய் வத்தல் பெருங்காயம் கிஸ்மிஸ் சேர்த்து தாளித்து கேரட் துருவல் வெள்ளரி துருவல் சுக்கு பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  6. பிசைந்த சாதத்துடன் கலந்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்.
  7. மாங்காய் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  8. மஞ்சள் பொடி காரப்பொடி வெந்தய பொடி சேர்த்து நன்றாக கிளறவும் .
  9. கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங்காயம் சேர்த்து தாளித்து சேர்க்கவும்
  10. பட்டர் பகாளாபாத் வித் ப்ரஷ் மேங்கோ பிக்கிள் பார்ட்டியில் மெயின் கோர்ஸில் கடைசியாக பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்