வீடு / சமையல் குறிப்பு / மலாய் கோப்தா கறி

Photo of Malai kofta curry by Geetha Sivanesan at BetterButter
1099
3
0.0(0)
0

மலாய் கோப்தா கறி

Dec-12-2017
Geetha Sivanesan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மலாய் கோப்தா கறி செய்முறை பற்றி

3 தக்காளி மிக்ஸியில் அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி அதில் பன்னீர் போட்டு மூடவும். ஒரு 10 நிமிடம் கழித்து தண்ணீர் பிழிந்து மிக்ஸிலயில் ஒரு அடி அடித்து வைக்கவும். ஒரு கப்பில் வேகவைத்து மசித்த கிழங்கு பன்னீர் பிரெடுகிரும்பஸ் மிளகாய் தூள் சாட் மசால் கரம் மசாலா உப்பு சேர்த்து உருண்டை பிடித்து பொரித்து எடுக்கவும். இப்பொது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளறவும். கெட்டியானதும் அதில் சிறிது சிறிதாக பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கிரீம் பொறித்த உருண்டைகள் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோப்தா செய்ய:
  2. பன்னீர் 200 கிராம்
  3. உருளை கிழங்கு 3 (வேகவைத்து மசித்தது)
  4. பிரட் கிரம்ப்ஸ் 3 மே. க
  5. மிளகாய் தூள் 1/2 மே.கே
  6. சாட் மசாலா 1/4 தேகரண்டி
  7. கரம் மசாலா 1/2 மேஜை கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கிரேவி செய்ய
  11. தக்காளி 3 (விழுது அரைக்கவும்)
  12. பட்டை 1
  13. ஏலக்காய் 1
  14. கிராம்பு 1
  15. ஜீரகம் 1/4 டீ. ஸ்
  16. இஞ்சி 1 துண்டு
  17. மிளகாய் பொடி 1/2 மே. கே
  18. மல்லி தூள் 1 1/2 மே. கே
  19. கரம் மசாலா 1/4 டீ.ஸ்
  20. உப்பு தேவையான அளவு
  21. கசூரி மே த்தி ஒரு சிட்டிகை
  22. பால் 1/2 கப்
  23. கிரீம் 1/2 கப்
  24. எண்ணெய் 2 மே. கே

வழிமுறைகள்

  1. 3 தக்காளி மிக்ஸியில் அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி அதில் பன்னீர் போட்டு மூடவும்.
  2. ஒரு 10 நிமிடம் கழித்து தண்ணீர் பிழிந்து மிக்ஸிலயில் ஒரு அடி அடித்து வைக்கவும். உருளை கிழங்கு 2 விசில் வந்ததும் வேகவைத்து எடுக்கவும்
  3. ஒரு கப்பில் வேகவைத்து மசித்த கிழங்கு பன்னீர், ப்ரெட் க்ரம்ப்ஸ் மிளகாய் தூள் சாட் மசால் கரம் மசாலா உப்பு சேர்த்து உருண்டை பிடித்து பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்க்கவும்.
  5. உப்பு சேர்த்து கிளறவும். கெட்டியானதும் அதில் சிறிது சிறிதாக பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கிரீம் பொறித்த உருண்டைகள் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்