வீடு / சமையல் குறிப்பு / Surul seedai (chettinaad snack)

Photo of Surul seedai (chettinaad snack) by Adaikkammai Annamalai at BetterButter
449
9
0.0(1)
0

Surul seedai (chettinaad snack)

Dec-13-2017
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Surul seedai (chettinaad snack) செய்முறை பற்றி

இது செட்டிநாடு பலகாரத்தில் பேமஸ் ஆன ஒன்று.... இது சிறு வயதில் விரலில் மாட்டிக்கொண்டு சாப்பிட்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றது . முழுக்க முழுக்க தேங்காய் பாலில் பிசைந்து தயார் செய்யக்கூடியவை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு - 2 கப்
  2. உளுந்து -200
  3. பொட்டுக்கடலை - 4 ஸ்பூன்
  4. தேங்காய் பால் - தேவையான அளவு பிசைவதற்கு
  5. எண்ணெய் - பொரிக்கும் அளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. சீடை அச்சு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சரிசி மாவு எடுத்து கொள்ளுங்கள் . அதை ஒரு இருப்பு சட்டியில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள் ..
  2. சிவக்கவும் கூடாது கையில் ஓட்டவும் கூடாது அடுப்பை சிம்மில் வைத்து நடுநிலையாக வறுத்து எடுத்து பின் ஆறியவுடன் சலித்து எடுத்து கொள்ளுங்கள்.
  3. கெட்டியாக இரண்டு கப் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள்
  4. அதன் பின் பொட்டுக்கடலை மற்றும் உளுந்தை தனித்தனியாக சிவக்கமால் வறுத்து எடுத்து கொள்ளவும்
  5. வறுத்து எடுத்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்தை மிக்சியில் அரைத்து எடுத்து, ஆறியவுடன் சலித்து பச்சரிசி மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  6. அதில் சிறிது உப்பு தேவையான அளவு போட்டு கிளறவும்.
  7. பின் கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய் பாலாய் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும். முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும் கடைசியாக கொஞ்சம் எண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்
  8. முறுக்கு பிழியும் கட்டையில் சீடை அச்சை போட்டு, கையில் எண்ணெய் தொட்டு கொள்ளவேண்டும் . எண்ணையை தொட்டு மாவு எடுத்து உருட்டி முறுக்கு மாவு உள்ளே வைக்கும் வகையில் வைத்து நீளமாக ரோடு மாதிரி பிழியவும்.
  9. கீழே ஒரு நியூஸ்பேப்பர் வைத்து பிழியவும்.
  10. பின் கத்தியில் முழுவதும் எண்ணெய் தடவி கொண்டு நீளமாக போட்ட ரோட்டை சுத்தும் அளவிற்கு ஒரு விரல் அளவிற்கு கட் செய்யுங்கள்.
  11. அதன் பின் அந்த கட் செய்த துண்டை எடுத்து பிசிறு இல்லாமல் சுத்தி நிக்க வையுங்கள் அதே போல் அனைத்தையும் சுத்தி தயார் செய்யவும்.
  12. எண்ணையை நன்கு காய வைத்து பின் அடுப்பை நார்மலில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுங்கள்.
  13. பின் அதை பொரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு கொள்ளுங்கள் .
  14. சுவையான சுருள் சீடை தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Apsara Fareej
Oct-10-2018
Apsara Fareej   Oct-10-2018

அருமையான ரெஸிபியாக இருக்கின்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்