Photo of Aloo Methi by Priya Tharshini at BetterButter
398
2
0.0(0)
0

ஆலு மேத்தி

Dec-13-2017
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆலு மேத்தி செய்முறை பற்றி

உருளைகிழங்கு மற்றும் வெந்தயகீரை சேர்த்து செய்யும் உணவு வகை. சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பறிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
  4. ப. மிளகாய் - 1 நறுக்கியது
  5. வெங்காயம் - 1/4 கப் நறுக்கியது
  6. உருளைகிழங்கு - 1/4 கிலோ
  7. வெந்தய கீரை - 1 கப்
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  10. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  12. சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை 4 விசில் விட்டு குக்கரில் வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கை,சிறிது உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  3. வெந்தய கீரை நன்கு கழிவி சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
  4. அதே கடாயில் மீதம் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை வெடிக்க விட்டு பூண்டு, ப.மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கி கொள்ளவும்.
  5. பின்பு வறுத்த உருளை மற்றும் வெந்தய கீரை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  6. மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,சீரக தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
  8. பின்பு அடுப்பை அனைத்து பறிமாறவும்.ஆலு மேத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்