வீடு / சமையல் குறிப்பு / கேரட் முள்ளங்கி மல்டி கிரைன் பராத்தா/சப்பாத்தி

Photo of Carrot radish multigran paratha / chappathi by Krishnasamy Vidya Valli at BetterButter
447
2
0.0(0)
0

கேரட் முள்ளங்கி மல்டி கிரைன் பராத்தா/சப்பாத்தி

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் முள்ளங்கி மல்டி கிரைன் பராத்தா/சப்பாத்தி செய்முறை பற்றி

கேரட் மற்றும் முள்ளங்கி உடலுக்கு மிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள் அவர்களுக்கு வித்தியாசமான இந்த பராத்தா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் . ஒருவருக்கு மூன்று வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மல்டி கிரன் மாவு - 2 கப்
  2. கேரட் துருவல் - 1 / 2 கப்
  3. முள்ளங்கி துருவல் - 1 / 2 கப்
  4. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் - 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் )
  8. ஆம்சூர் பவுடர் - 1 தேக்கரண்டி ( விருப்பப்பட்டால் )
  9. தனியா பொடி - 1 தேக்கரண்டி ( விருப்பப்பட்டால் )
  10. பெருங்காயம் - 4 சிட்டிகை
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 3 தேக்கரண்டி
  12. நெய்/ எண்ணெய் - 2 தேக்கரண்டி மற்றும் பராத்தா வாட்டுவதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை நெய் / எண்ணெய் தவிர ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
  2. இரண்டு தேக்கரண்டி நெய் /எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. சப்பாத்தி கல்லில் இட்டு தோசை கல்லில் நெய் /எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு தயிர் சாலட் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்