வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு ரைத்தா/சாலட்

Photo of Vazhaithandu raitha/salad by Krishnasamy Vidya Valli at BetterButter
632
2
0.0(0)
0

வாழைத்தண்டு ரைத்தா/சாலட்

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு ரைத்தா/சாலட் செய்முறை பற்றி

எப்போதும் கேரட் அல்லது ஆனியன் ரைத்தா செய்வதற்கு பதில் வித்தியாசமான இந்த வாழைத்தண்டு ரைத்தா செய்யலாம். இதையே சாலட் போலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு - பொடியாக நறுக்கியது - 1 / 2 கப்
  2. மஞ்சள்பொடி-1/4தேக்கரண்டி
  3. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  4. கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  7. மிளகாய் வத்தல் - 1
  8. உப்பு-1/2தேக்கரண்டி
  9. ரைத்தாவாக செய்வதானால் -
  10. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  11. பச்ச மிளகாய் - 1
  12. தயிர் - 1 / 4 கப்
  13. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  14. சாலட் ஆக செய்வதானால்-
  15. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  16. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  17. பெருங்காயம் - 2 சிட்டிகை
  18. எலுமிச்சை சாறு - 1 / 2 தேக்கரண்டி
  19. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை பொடியாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  2. ரைத்தா செய்வதற்கு
  3. தேங்காய் பச்ச மிளகாய் தயிர் ஒரு தேக்கரண்டி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. மீதியுள்ள தயிரில் வேக வைத்த வாழைத்தண்டு அரைத்தவிழுதுசேர்த்துகிளறவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மிளகாய் வத்தல் தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான வாழைத்தண்டு ரைத்தா ரெடி
  6. சாலட் செய்வதாக இருந்தால்
  7. வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மஞ்சள்பொடி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மிளகாய் வத்தல் பெருங்காயம் மிளகு தூள் தனியா தூள் சேர்த்து தாளித்து வேக வைத்த வாழைத்தண்டு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தபின் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் சுவையான வாழைத்தண்டு சாலட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்