வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் கேக்

Photo of Apple Cake by Shamla Sabeek at BetterButter
762
3
0.0(0)
0

ஆப்பிள் கேக்

Dec-13-2017
Shamla Sabeek
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் கேக் செய்முறை பற்றி

ஆப்பிள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து எளிமையான முறையில் செய்யக்கூடிய பார்ட்டி கேக்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா 1 1/4 கப்
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. சீனி 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் பொளடர் 1 தேக்கரண்டி
  6. பால் 3/4 கப்
  7. ஆயில் 1/3 கப்
  8. முட்டை 1
  9. ஆப்பிள் தோல் நீக்கி நறுக்கியது 2
  10. டாப்பிங்கிற்க்கு தேவையான பொருள்கள்
  11. பட்டர் 5 1/2 மேஜைகரண்டி
  12. சீனி 1/2 கப்
  13. முட்டை 1
  14. வெண்ணிலா எஸென்ஸ் 1 தே.க

வழிமுறைகள்

  1. முதலில் ஓவனை 180c ப்ரீ ஹீட் செய்யவும்
  2. ஒரு பாத்திரத்தில் ட்ரை இன்கிரீடியன்ஸை கலந்து வைக்கவும்
  3. வேறு பாத்திரத்தில் வெட் இன்கிரீடியன்ஸை விஸ்க் செய்து வைக்கவும்
  4. விஸ்க் செய்த வெட் இன்கிரீடியன்ஸை ட்ரை இன்கிரீடியன்ஸுடன் கலந்து நன்கு பீட் செய்து கேக் பாத்திரத்தில் ஊற்றவும்
  5. நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதன் மீது மேலாக அடுக்கி பத்து நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும்
  6. டாப்பிங்
  7. பட்டரையும் சீனியையும் க்ரீமியான பருவம் வரை பீட் செய்து கொள்ளவும்
  8. அதனுடன் முட்டை மற்றும் வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வரை பீட் செய்து கலவை ஆக்கி வைத்து கொள்ளவும்
  9. அந்த கலவையை பத்து நிமிடம் பேக் செய்த கேக்கின் மேல் ஊற்றி லெவல் செய்து 40 நிமிடம் 180c ஓவனில் வைத்து எடுக்கவும்
  10. இந்த செய்முறையில் கேக் ஃபட்ஜி டைப்பில் இருக்கும் மற்றும் மேல் பாகம் க்ரஸ்டியாக இருக்கும்
  11. டூத்ப்பிக் பயன்படுத்தி கேக் வெந்ததா என்பதை தெரிந்து கொள்ளலாம்
  12. பார்ட்டிக்கு தேவையான சுவையான ஆப்பிள் கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்