வீடு / சமையல் குறிப்பு / பிரட் சாண்ட்விச்

Photo of Bread Sandwich by saranya sathish at BetterButter
310
2
0.0(0)
0

பிரட் சாண்ட்விச்

Dec-14-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் சாண்ட்விச் செய்முறை பற்றி

பிரட் தக்காளி சீஸ் சேர்த்து செய்த சுவையான சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் - 4
  2. பூண்டு - 5 பல்
  3. கொத்தமல்லி இலை - 1 கப்
  4. பச்சை மிளகாய் - 3
  5. வேர்க்கடலை - 1/2 கப்
  6. காய்ந்த மிளகாய் - 4
  7. தக்காளி - 1
  8. வெள்ளரிக்காய் - 1
  9. சீஸ் சிலைஸ் - 4
  10. எண்ணெய் - சிறிது
  11. வெண்ணெய் - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின் கொத்தமல்லி இலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  3. பின் அதே கடாயில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வருத்து பின் மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும்.
  4. பிரெட்டில் வெண்ணெய் தடவி ஒரு பாதியில் கடலை பொடியை பரப்பி விடவும்.
  5. மற்றொரு பிரேட்டில் கொத்தமல்லி சட்னி தடவி அதன் மேல் தக்காளி சிலைச், வெள்ளரிக்காய் சிலைச் வைத்து அதன் மேல் சீஸ் சிலைச் வைத்து இரண்டு பிரேட் மூடவும்.
  6. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
  7. பின் செய்து வைத்த பிரேட் சாண்ட்விசை சேர்த்து இரண்டு புறமும் நன்கு டோச்ட் செய்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்